வேதவசனம்: கலாத்தியர் 6: 1. சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கவனித்தல்: அப்போஸ்தலனாகிய பவுல் தன் சக விசுவாசிகளுக்கு எழுதுவதை நமக்கு நினைவுபடுத்துகிறார். அவர்களை சகோதரரே என்று அழைக்கிறார். கிறிஸ்தவர்கள் பாவம் செய்ய முடியுமா? வெளிப்படையான பதில், ஆம் என்பதுதான். இல்லையேல் இந்த வேதவசனம் அர்த்தமற்றதாக இருக்கும். நான் பாவம் செய்ய வேண்டும் என்று அவர் சொல்லவில்லை, மாறாக நாம் பாவம் செய்தால் என்று அவர் சொல்வதைக் கவனியுங்கள்.
ஒரு விசுவாசி பாவம் செய்யும்போது சபையில் என்ன செய்ய வேண்டும். நாம் சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகப் பேசுவதற்கு முன் அதைப் பற்றி வேறு எவரிடமும் விவாதிக்கக் கூடாது. அப்படிப்பட்ட நபரை முதலாவது சீர்பொருந்தபண்ணுங்கள் என்று அப்.பவுல் சொல்வதை நாம் பார்க்கிறோம். நாம் ஒரு பாவத்தைக் காணும்போது, நாம் கண்டதைக் குறித்து சம்பந்தப்பட்டவரிடம் கேட்பதற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என இயேசு நமக்கு போதித்திருக்கிறார். ( சம்பந்தப்பட்ட நபரிடம் முதலாவதாகச் செல்லவேண்டும் என இயேசு சொல்வது எவ்வளவு ஞானமானது! ஒருவேளை நம்மிடம் இருக்கும் தகவல்கள் தவறானதாக இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் தேவையற்ற சங்கடங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். நாம் நேரடியாகக் கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபர் மனம் திரும்பக் கூடும், அப்படி நடக்குமெனில், அவர் தன்னை ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள முடியும் (மத்.18:15-17).
இந்த ஆலோசனையானது ஆவிக்குரியவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். ஒருவர் ஆவிக்குரியவராக உண்மையிலேயே இருப்பார் எனில், அவர் ஆவியானவரி அவரை சீர்பொருந்தப் பண்ண விரும்புவதையே விரும்புகிறார், அழித்துப் போட அல்ல என்பதை உணர்ந்து தன்னை சரிசெய்து கொள்வது எளிதானதாக இருக்கும்.
மீட்பே இலட்சியம்!. 99 ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன 1 ஆடைத் தேடி அலைந்து மீட்ட நம் நல்ல மீட்பரை நாம் மனதில் கொள்ள வேண்டும். சிலர் சபையின் தூய்மை குறித்து வைராக்கியமுள்ளவர்களாக இருந்து, சம்பந்தப்பட்ட நபரை விட்டு விலக மனதுள்ளவர்களாக இருக்கக் கூடும்.
அவர்களை சீர்பொருந்தப் பண்ணுவது என்பது மிகவும் கவனமாக அன்புடன் செய்யப்படவேண்டும்- தேவன் மீதும் மீட்பு தேவைப்படுகிற நபர் மீதும் உள்ள அன்புடன் செய்யப்பட வேண்டும். இயேசு அந்த நபரை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்-அவர்களுடைய ஆத்தும மீட்புக்காக அவர் எதையும் கொடுக்க விரும்புகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
பயன்பாடு: எதிரியானவன் சூழ்நிலையைப் பயன்படுத்தி வீழ்த்திவிடாதபடிக்கும் ஆவிக்குரியவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஆவியானவர் அவர்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய பெருமை கொள்ளக் கூடும். அவர்கள் மற்றவர்களிடம் சொல்லி, கிசுகிசுக்கள் பரவ காரணமாகக் கூடும். அவர்களும் கூட அதே பாவத்தில் விழும்படிக்கு சோதிக்கப்படக் கூடும். நாமும் சோதிக்கப்படக் கூடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நாம் நம்மைச் சரிசெய்த என்ன செய்வோமோ அதையே மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களைச் சரிசெய்ய நாம் அவர்களுக்கு உதவ ஏதுவாக இருக்கும்.
ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இக்காரியங்களில், தேவனுடைய அன்பு என் மூலமாக பாய்ந்து செல்லவும், உம்முடைய ஞானம் என்னை வழிநடத்தவும் செய்யட்டும். ஆமென்.