Sunday, March 14, 2021
அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல்!
Saturday, January 9, 2021
காரிருளில்...
வேதவசனம்:ஆதியாகமம் 1:1-3 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
கவனித்தல்: மேலே உள்ள வசனங்களை வாசிக்கும் போது ஒரு புதிய வெளிப்பாடு எனக்கு கிடைத்தது. இந்த வசனங்களை நான் படிக்கும் போது, தேவனை ஒரு சிருஷ்டிகராகவும், மற்றும் தேவன் ஒரு பேசுபவராகவும் இருக்கிறார் என நான் நினைப்பேன். இந்த முறை எனக்கு புதிதாக சில விசயங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் வெளிச்சத்தினால் நிறைந்திருந்த வானம் உருவாகுவதற்க்கு முன்னே இருந்த மகா பெரிய இருளினால் தேவ ஆவியானவர் உலாவி கொண்டிருப்பதை தடுக்க முடியவில்லை. தேவ ஆவியானவர் இருளில் உலாவிக் கொண்டிருந்தார்!
பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதும் காரிருளில் மத்தியிலும் உலாவுகிறார். இருள் அவரை தடுத்து நிறுத்த முடியாது. நண்பகல் வெளிச்சத்தில் பார்ப்பது போல இருளிலும் அவரால் சரியாக பார்க்க முடியும். ஆவியானவரால் நடத்தப்படுபவர்கள் இருளைக் கண்டு பயப்பட தேவையில்லை.
பயன்பாடு: எதிர்காலத்தைப் பற்றிய அனேக விஷயங்கள் இருளில் உள்ளது, ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவ ஆவியானவர் ஏற்கனவே காரிருளில் இருந்து உலாவிக்கொண்டு இருக்கிறார். பில் கெய்தரின் வார்த்தைகளில் சொல்வதானால், “ நான் விசுவாசிக்கிறேன், என்னுடைய அவிசுவாசம் நீங்க எனக்கு உதவும். நான் அறிந்திராத (காரிருள்) பாதையில் உம்மை நம்பி நான் நடக்கிறேன்.”
நம் தேசத்தில், நம் உலகில், மற்றும் என் சூழ்நிலைகளில் காணப்படுகிற இருளானது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கும் மற்றும் அவருடைய கிரியைகளுக்கும் தடையாக இருக்க முடியாது !!!
தேவ ஆவியானவர் அங்கே இருந்தார் என்றாலும், சிருஷ்டிப்பின் வேலையானது தேவனால் சொல்லப்பட்ட வார்த்தை வெளிப்படும் வரைக்கும் ஆரம்பிக்க வில்லை. நான் சொல்கிற வார்த்தைகளினால், தேவனுடைய ஆவியானவர் அசைவதில்லை, மாறாக, நான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசும்போது அவர் செயல்படுகிறார். எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நான் எந்தளவுக்கு அதிகமாக அறிந்திருக்கிறேனோ, அந்தளவுக்கு நான் ஜீவனுள்ள தேவ வார்த்தையாகிய இயேசுவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வேன். அதன்பின் அதிக அதிகமாக தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஒத்ததாக என் வார்த்தைகளும் தொடர்ந்து இருக்கும்.
ஜெபம்: இயேசுவே, நீர் உமது தந்தையின் வார்த்தையை பேசினீர், நான் நீர் சொன்ன வார்த்தைகளை - சந்தேகத்தின் வார்த்தைகளை அல்ல, விசுவாச வார்த்தைகளை - வெறுப்பின் வார்த்தைகளை அல்ல அன்பின் வார்த்தைகளை - புண்படுத்தும் வார்த்தைகள் அல்ல கனிவான வார்த்தைகளை உண்மையாக பேச எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, மனித பலவீனத்திலிருந்து நான் பேசத் தொடங்கும் போது என் வாய்க்கு காவல் அமைத்து, என்னை திருத்தும். ஆமென்
Friday, January 8, 2021
Is anything too hard for the Lord?
READ: Genesis 17, 18; Psalm 9; Matthew 5:1-32
SCRIPTURE: Genesis 17: 1 When Abram was ninety-nine years old, the Lord appeared to him and said, “I am God Almighty; walk before me faithfully and be blameless.
17 Abraham fell facedown; he laughed and said to himself, “Will a son be born to a man a hundred years old? Will Sarah bear a child at the age of ninety?”
18:11 Abraham and Sarah were already very old, and Sarah was past the age of childbearing. 12 So Sarah laughed to herself as she thought, “After I am worn out and my lord is old, will I now have this pleasure?”
OBSERVATION: Today's reading passage has seeds for many contemplative thoughts. However, two things draw my attention as I read today. Here, God calls Abram to "walk" and to "be blameless." This call is not to live an ordinary life that everyone does, but for faithfully walking with God. Walking with God and being blameless are inseparable. We are called to live a blameless life in front of the people who live around us.
It is somewhat surprising to see that the same Abraham who believed God's promise without any doubt when God answered his heart desire for a child (Gen.15:1-6) now laughs in disbelief. Sarah also did the same. They were not speaking out what they thought about bearing a son in their old age, but for God they were audible. God did not reprimand them, but reminded his promise again. " Is anything too hard for the Lord?"
APPLICATION: I am called to live a faithful life to walk with God, a blameless life in front of others, to God. While I am faithful in external things, I need to be aware of being faithful to God in my own heart and thoughts. God sees them all. His word has the power to do anything impossible. I may be old or too young to walk with God and to fulfill the call. "Is anything too hard for the Lord?" All I need to do is to believe his word and waiting for the appointed time for the fulfilment of God's promise. “Everything is possible for one who believes” (Mark 9:23).
PRAYER: Father God, instead of looking at my circumstances, hearing what others say, and thinking about what is not possible, help me to look up and listen to your words to fulfill the call you have placed for me,. Thank you for reminding the promise you gave me before. God, you are faithful. Give me your strength to be faithful in everything. Amen.
- Arputharaj Samuel
+91 9538328573
9 January 2021
தேவையில்லாத கவலை
வாசிக்க: ஜனவரி 02, 2021: ஆதியாகமம் 3-5; லூக்கா 2
வேதவசனம்: லூக்கா 2:43-45 பண்டிகை நாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
கவனித்தல்: அவருடைய வார்த்தையில், பனிரெண்டு வயது சிறுவன் தன் பூமிக்குரிய தாயை நோக்கி பின்வருமாறு சொன்னதாக நான் கேட்கிறேன்: ”உங்களுக்கு தெரியாதா….?” அல்லது ”நான் எங்கே இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?” ”என்னுடைய பிறப்பைக் குறித்து தேவ தூதன் சொன்னது நியாபகம் இல்லையா? கிழக்கில் இருந்து வந்த மனிதர்களின் சந்திப்பு மற்றும் பரிசுகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆலயத்தில் வைத்து உங்களை சந்தித்த சிமியோன் மற்றும் அன்னாள் அவர்களை நியாபகம் இல்லையா? அம்மா, என்னை எங்கே கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தீர்கள்?
மரியாளும், யோசேப்பும் தங்களுக்கு முன்னமே உரைத்ததை நினைவு படுத்திருப்பார்கள் எனில், கவலை நிறைந்த மூன்று நாட்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.
பயன்பாடு: பரிசுத்த ஆவியானவர் என்னை நோக்கி “ லியான், என்னிடத்தில் நீ என்ன எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய்? நான் உனக்கு சொன்னது நியாபகம் இல்லையா? நான் உனக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்று எதிர்பார்த்தாயா? என்று சொல்வதை நான் கேட்கிறேன்..
ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, பிதாவாகிய தேவனை அறிந்து கொள்ளவும், அவர் எனக்கு உதவி செய்தால், நான் தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பதையும் அறிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். அவர் இயேசுவை அனுப்பினார்! அவர் எனக்கு பரிசுத்த வேதாகமத்தை தந்தார்! பரிசுத்த ஆவியே, எனக்குள் நீர் வாழவும், என் மூலமாக கிரியை செய்யவும் உம்மை அவர் அனுப்பி இருக்கிறார். ஆமென்.
Thursday, January 7, 2021
நீர் என்னைக் காண்கிற தேவன்
வாசிக்க: ஆதியாகமம் 15, 16; சங்கீதம் 8, மத்தேயு 4:12-25
வேதவசனம்: ஆதியாகமம் 16: 6 அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். 7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் (கண்டார்)....அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.பயன்பாடு: என் சுய விருப்பங்கள் மற்றும் தவறான யோசனைகளுக்கு செவிகொடுப்பதை நான் தவிர்க்க வேண்டும். மாறாக, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்காக நான் அவருக்காக காத்திருக்க வேண்டும். மேலும், நான் தேவனுடைய பார்வையில் இருந்து தப்பி, விலகிச் செல்ல முடியாது என்பதி நினைவில் கொள்ள வேண்டும். நான் யாராக இருந்தாலும், என்னைக் கண்டு, என்னுடன் பேச வல்லவராக தேவன் இருக்கிறார். தாவீதைப் போல, “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” (சங்.8:4) என்று தேவனிடம் நான் கேட்கக் கூடும். ஆனால், நான் சேவிக்கும் ஜீவனுள்ள தேவன் அன்புடன் என்னைப் பார்க்கிறார். அவர் என்னைப் பற்றி கரிசனையாய் விசாரிக்கிறவராக இருக்கிற படியால், நான் என் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடலாம் (1 பேதுரு 5:7). நான் எங்கிருந்தாலும், என்ன நிலையிலிருந்தாலும், தேவன் என்னைப் பார்த்து, தம் வார்த்தைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதை எதுவும், எவரும் தடுக்க முடியாது.
ஜெபம்: பிதாவே, எனக்காக யாருமே இல்லை என்று நான் நினைத்த போதும், நான் தனிமையை உணர்ந்த நேரங்களிலும் நீர் என்னைக் காண்கிறபடியால் உமக்கு நன்றி. நீர் என்னைப் பார்க்கும் போது, என்னைப்பற்றி விசாரிக்கும்போது, அதைவிட வேறேதுவும் எனக்கு பெரிது அல்ல. உமக்கு எப்போதும் கீழ்ப்படிகிறவனாக நான் வாழ எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
8 ஜனவரி 2021
The Living God who sees me
READ: Genesis 15, 16; Psalm 8; Matthew 4:12-25
SCRIPTURE: Genesis 16: 6 Then Sarai mistreated Hagar; so she fled from her. 7 The angel of the Lord found Hagar near a spring in the desert...13 She gave this name to the Lord who spoke to her: “You are the God who sees me,” for she said, “I have now seen the One who sees me.”
OBSERVATION: Lot chose to live in a good and a watered place, when he moved away from Abram. Here, without knowing the destination, Hagar ran away from Sarai in order to escape from Sarai's mistreatment. Instead of analyzing who would be held accountable for this misery in Hagar's life, observing what God did to her will be helpful for us. As the master of Hagar, Abram could have avoided this in Hagar's life. However, God who cares and sees the people who are in need, found her. The invisible God helped Hagar to see his kindness and gave his word about the unborn son and a guidance for Hagar. Without any doubt, we can say that Hagar was comforted and relieved from her sorrowful state since she saw the loving kindness of the invisible God.
APPLICATION: I should avoid paying heed to my own inclinations or wrong suggestions. Rather, I need to wait on God for the fulfillment of his promises. Further, I have to remember that I cannot go away from the sight of God. Whoever I may be, God is able to find me and communicate with me. Like David, I may ask God, "what is mankind that you are mindful of them, human beings that you care for them?" (Ps.8:4). But the living God whom I serve sees me with love. He is the one who cares for me, so I can cast all my worries upon him (1 Peter 5:7). Wherever I am, whatever state I may be in, they cannot hinder God to see me and to give his word for my life.
PRAYER: Father, thank you for finding me when I thought that no one is for me and when I felt loneliness. When you see and care for me, nothing else matters to me. Help me to obey you always. Amen.
- Arputharaj Samuel+91 9538328573
8 January 2021
Wednesday, January 6, 2021
A life built on God's word
READ: Genesis 13, 14; Psalm 7; Matthew 4:1-11
SCRIPTURE: Genesis 13: 12 Abram lived in the land of Canaan, while Lot lived among the cities of the plain and pitched his tents near Sodom.
OBSERVATION: In Genesis 13, we see Abram's noble character of giving up his rights to choose to his relative Lot, instead of proving his superiority over things. He was a peace-loving person and gave priority to stay in the promised land, Canaan. It doesn't mean that he was weak. In Chapter 14, we read that he was able to win the four mighty kings and delivered (including Lot) those who were captured by the kings. Importantly, his eyes were on God and his promise, not on the things and wealth of this world. Instead of building an empire or a home for him, he built an altar and called the name of the LORD. Abram's life led to peace and to receive God's promise, but Lot became a prisoner of his circumstances.
APPLICATION: Instead of proving myself and my worth, I need to give preference to God's plan and will. At the same time, I should not neglect or abandon somebody when s/he is in trouble, whoever s/he may be. I must do what I could do. Above all, living in God's promises and staying with God gives more joy than anything else. I will not allow any worldly temptations to prevail me. Like Jesus, I will appropriately use the word of God to defeat the enemy.
PRAYER: Father, thank you for the example you set before us. Help me to live in your words and walk with you today and always. Amen.
- Arputharaj Samuel
+91 9538328573
7 January 2021
தேவனுடைய வார்த்தையை அஸ்திபாரமாகக் கொண்ட வாழ்க்கை
வாசிக்க: ஆதியாகமம் 13, 14; சங்கீதம் 7; மத்தேயு 4:1-11
வேதவசனம்: ஆதியாகமம் 13:12 ஆபிராம் கானான்தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
பயன்பாடு: என்னையும் என் தகுதியையும் நிரூபிப்பதற்குப் பதிலாக, நான் தேவனுடைய திட்டம் மற்றும் அவருடைய சித்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதே சமயத்தில், ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது, அவர் யாராக இருந்தாலும் அவரை புறக்கணிக்காமல், என்னால் செய்யக் கூடியதை நான் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய வாக்குத்தத்தத்தில் வாழ்வதும், தேவனுடன் இருப்பதும் எனக்கு மற்றெதையும் விட அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. ஆகவே, எந்த உலகப் பிரகாரமான சோதனைகளும் என்னை ஜெயிக்க நான் அனுமதிக்க மாட்டேன். இயேசுவைப் போல, தேவனுடைய வார்த்தையை சரியாகப் பயன்படுத்தி, எந்த சோதனைகளையும் ஜெயிப்பேன்.
ஜெபம்: பிதாவே, நீர் எனக்கு முன் வைத்திருக்கிற நல்ல முன்னுதாரணமான வாழ்க்கைக்காக நன்றி. இன்றும் என்றும், உம் வார்த்தையின்படி வாழவும், உம்முடன் எப்போதும் நடக்கவும் உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
7 ஜனவரி 2021
Tuesday, January 5, 2021
The way of righteousness
READ: Genesis 11, 12; Psalm 6; Matthew 3:13-17
SCRIPTURE: Matthew 3: 15 Jesus replied, “Let it be so now; it is proper for us to do this to fulfill all righteousness.” Then John consented.
OBSERVATION: In our reading today, we see Jesus's first words in the Gospel of Matthew. Until then, Jesus was an unknown person who lived a normal life. Through his mother, John the Baptist may have heard a few things about Jesus and their family connection. However, John was not aware of who Jesus really was (John 1:31). On the other hand, despite being fully aware of his identity, Jesus was ready "to fulfill all righteousness." When Jesus was baptized by John, it was the culmination of John's prophetic ministry. It became the time to declare the long awaited good news about the arrival of the Messiah. As the Gospel says, the people around them were able to hear the heavenly affirmation of Who Jesus is.
APPLICATION: Others may not know about my identity in Christ. However, that should not deter me to fulfill all righteousness before God. Irrespective of my situation, voluntarily I should go forward to do proper things. Whatever I do, I am doing it for the Lord God, not for the people around me. When I do so, others will have opportunities to see and to hear God through my life and actions.
PRAYER: Father God, thank you for the example you have shown us to walk in your righteous way, through the life of Jesus Christ. Strengthen my feet to walk in your path. Amen.
- Arputharaj Samuel
+91 9538328573
6 January 2021
நீதியின் பாதை - நடக்க ஆயத்தமா?
வாசிக்க: ஆதியாகமம் 11, 12; சங்கீதம் 6; மத்தேயு 3:13-17
வேதவசனம்: மத்தேயு 3: 15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
கவனித்தல்: இன்றைய நம் வேதவாசிப்பில், மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இயேசுவின் முதல் வார்த்தைகளைக் காண்கிறோம். அது வரையிலும், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த, அறியப்படாத ஒரு நபராகவே இயேசு இருந்தார். இயேசுவைப் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும், சில விஷயங்களைத் தன் தாயின் மூலமாக யோவான்ஸ்நானகன் அறிந்திருக்கக் கூடும். ஆயினும், இயேசு யார் என்பதைப் பற்றி யோவான் முழுமையாக அறிந்திருக்கவில்லை (யோவான் 1:31). இன்னொரு பக்கத்திலோ, தன் சுய அடையாளத்தை நன்றாக அறிந்திருந்தாலும் கூட, “எல்லா நீதியையும் நிறைவேற்ற” இயேசு விருப்பம் உள்ளவராக இருந்தார். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது, அது யோவானுடைய தீர்க்கதரிசன ஊழியத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறதாக இருந்தது. நீண்ட காலமாக மக்கள் கேட்க காத்திருந்த நற்செய்தியான மேசியாவின் வருகையைப் பற்றிய செய்தியை அறிவிக்கிற ஒரு நேரமாக அது இருந்தது. நற்செய்தி நூல் சொல்வது போல, இயேசு யார் என்பதைப் பற்றிய பரலோக உறுதிப்படுத்தலை அவரைச் சுற்றி இருந்தவர்கள் கேட்க முடிந்தது.
பயன்பாடு: மற்றவர்கள் என் அடையாளத்தைப் பற்றி நான் யார் என்பதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கலாம். ஆயினும், தேவனுக்கு முன்பாக எல்லா நீதியையும் நிறைவேறுவதை அது தடுக்கக் கூடாது. என் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் சரி, சரியான (ஏற்ற) காரியங்களைச் செய்ய நான் முன் செல்ல வேண்டும். நான் என்ன செய்தாலும், அதை கர்த்தருக்காக நான் செய்ய வேண்டும், என்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக மட்டுமல்ல. நான் அவ்வாறு செய்யும்போது, என் வாழ்க்கை மூலமாக மற்றவர்களும் இயேசுவைக் காணவும், கேட்கவும் செய்ய நிர்ணயிக்க வேண்டும். மற்ற மனிதர்கள் என் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலமாக தேவனைப் பற்றி அறிந்து கொள்ளவும், கண்டு கொள்ளவும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் நீதியின் பாதையில் நடக்க இயேசுவின் வாழ்க்கையின் மூலமாக நீர் காண்பித்த முன்மாதிரிக்காக உமக்கு நன்றி. உம் வழியில் நடக்க என் கால்களை பலப்படுத்தி அருளும். ஆமென்.
-அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
6 ஜனவரி 2021
Monday, January 4, 2021
பாதைகாட்டும், மா யெகோவா
வாசிக்க: ஆதியாகமம் 9, 10: சங்கீதம் 5; மத்தேயு 3:1-12
வேதவசனம்: சங்கீதம் 5: 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8. கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
கவனித்தல்: சங்கீதம் 5ல், தேவனே, நீர் பாவத்தை வெறுக்கும் பரிசுத்தர், ஆனால் பாவியாகிய நானோ உம் கிருபையால் உம் முன்பாக வருகிறேன் என்று தாவீது கூறுகிறார். தேவனுடைய கிருபையால் மட்டுமே நாம் அவர் முன்பாக வர முடியும். அவருடைய கிருபைப் பேரன்பு, நாம் அவர் சமூகத்தில் அவர் முன் வந்து நிற்க நமக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய வழியில் நடப்பதற்கு, தேவ வழிகாட்டுதல் தனக்கு தேவை என தேவனுடைய இரக்கத்தை நம்பி தாவீது ஜெபிக்கிறார்.
பயன்பாடு: தேவனுடைய கிருபையால், நான் எங்கே இருந்தாலும் தேவனுக்கு முன்பாக வந்து, அவர் சமூகத்தில் நிற்க முடியும். கிருபையால் இரட்சிப்பின் வாழ்வை பெற்றனுபவிக்கிற, முன்பு பாவியாக வாழ்ந்த எனக்கு, தேவனுடைய நீதியின் பாதையில் நடக்க அவருடைய வழிகாட்டுதலும், மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட முடியாதபடி ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ அவருடைய பாதுகாப்பும் எனக்குத் தேவை. தேவனுக்கு முன்பாக நான் வந்து நிற்கும் இந்நாளில், நான் அவருடைய சமூகத்தை மகிழ்வுடன் அனுபவிக்கவும், அவருடைய அன்பை நாள் முழுதும் ருசிக்கவும், மற்றும் ஒரு பரிசுத்தமான வாழ்வை வாழவும், நான் தேவனுடன் நடக்க வேண்டியது அவசியம்.
ஜெபம்: பிதாவே, எனக்கு நீர் காண்பித்து வருகிற உம் கிருபைப் பேரன்புக்காக நன்றி. என் வாழ்க்கையை உமக்குப் பிரியமானபடி வாழ, என்னை உம் நீதியின் வழியில் நடத்தும். ஆமென்.
-அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
5 ஜனவரி 2021
Guide Me, O Thou Great Jehovah
READ: Genesis 9, 10; Psalm 5; Matthew 3:1-12
SCRIPTURE: Psalm 5: 7 But I, by your great love, can come into your house; in reverence I bow down toward your holy temple. 8 Lead me, Lord, in your righteousness because of my enemies—make your way straight before me.
OBSERVATION: In Psalm 5, David exclaims that LORD you are the Holy One who hates any form of evil. But I, a sinner comes to you, because of your loving kindness. We can come to God only by his grace. His loving kindness gives us a courage to enter into his presence. Then, trusting God's mercy, David prays for God's guidance to walk in His way.
APPLICATION: By God's Grace, I can come to him, and can enter into his presence wherever I may live. As a sinner saved by His grace, I need God's guidance to walk in his righteous way and protection in order to live a blameless life. As I come to God today, If I want to enjoy his presence and his love throughout the day, and to live a holy life, I need to walk with God.
PRAYER: Father, thank you for your loving kindness for me. "Lead me," to live my life in your way. Amen.
- Arputharaj Samuel
+91 9538328573
5 January 2021
Sunday, January 3, 2021
எல்லாவற்றிலும்....
வாசிக்க: ஆதியாகமம் 7,8; சங்கீதம் 4; மத்தேயு 2:16-23
வேதவசனம்: ஆதியாகமம் 7:5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
கவனித்தல்: நோவாவின் காலத்தில், ஒரு பேழையைக் (பெரிய மிதவை அல்லது கப்பல்) கட்டுவதும், பேரழிவு வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கைச் செய்தியை ஜனங்களிடம் சொல்வதும், அவரைச் சுற்றியிருந்த மக்களுக்கு நூதனமானதாக, இதுவரைக் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்திருக்கும். “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” உண்மைதான் என்றாலும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடிப்பதில் நோவா கவனமுள்ளவராக இருந்தார். “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா” என நோவாவைப் பற்றி புதிய ஏற்ப்பாட்டில் வாசிக்கிறோம். அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த காலத்தில், ஜனங்கள் அவரைப் பார்த்து பரியாசம் பண்ணி சிரித்திருப்பார்கள். மேலும், ஒருவரும் அவர் சொன்ன எச்சரிக்கை செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதில் அவர் உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவருடைய முழு குடும்பத்தையும், பேழையில் நுழைந்த அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றியது.
பயன்பாடு: நான் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய விரும்புகிறேன். ஆயினும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, என் வசதிக்கேற்றபடி நான் தெரிந்து கொள்ளும் குறிப்பிட்ட காரியங்களில் மட்டுமே கீழ்ப்படிதலுள்ளவனாக நான் இருக்கக் கூடும். காலப்போக்கில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் தேவனுக்கு செவிகொடுக்காமல் அசட்டையாக இருப்பதைப் பார்த்து, நானும் கூட தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு உற்சாகம் குறைந்து காணப்படலாம். நான் நினைத்ததை விட அதிகமாக, வாக்குத்தத்தம் நிறைவேற அல்லது நான் எதிர்பார்த்த காரியம் நடைபெற காலம் தாமதித்தல் என்னை விரக்தியடையச் செய்து, நான் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் சோர்வடையப் பண்ணக் கூடும். நான் தேவனுக்காகக் காத்திருப்பதிலும், அவருடைய வார்த்தை நிறைவேறவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
ஜெபம்: பிதாவே, இந்த நாளுக்கான புத்துணர்ச்சி அளிக்கும் கிருபைக்காக நன்றி. உதட்டளவில் மட்டுமல்ல, என் வாழ்க்கை மற்றும் நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உம்மை கனப்படுத்த விரும்புகிறேன். இதைச் செய்ய உம் பெலன் எனக்குத் தேவை. எங்களுக்கு நினைப்பூட்டி, கீழ்ப்படிய உதவுகிற உம் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
Through it ALL
Read: Genesis 7,8; Psalm 4; Matthew 2:16-23
உங்களுடன் இருக்கும் ஒருவர்
வாசிக்க: ஆதியாகமம் 5,6; சங்கீதம் 3; மத்தேயு 2:1-15
வேதவசனம்: சங்கீதம் 3: 6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
கவனித்தல்: தாவீது அனேக யுத்தங்களில் வெற்றி பெற்ற நன்கறியப்பட்ட ஒரு போர்வீரன். ஒரு தைரியமான, வலிமையான ஒருவர் இது போல உறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்துவது இயல்பு என சிலர் நினைக்கலாம். ஆனால், தாவீது தனக்கு விரோதமக எழும்பின தன் சொந்த மகனிடம் இருந்து தப்பியோட வேண்டிய வருந்தக்க நிலையில் இருந்தார் என வேதம் சொல்கிறது. தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பித்து செல்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லாத நிலையில் தாவீது இருந்தார் என 2 சாமுவேல் 15:14 கூறுகிறது. அவருடைய நெருங்கிய உறவுகள் கூட அவருக்கு எதிராக திரும்பின சிறுமைப் படுத்தப் பட்ட ஒரு நிலையில் தாவீது இருந்தார். ஆயினும் தன்னுடைய எதிரிகளின் எண்ணிக்கையைக் குறித்தோ அவர்களது கேலியான நிந்தனைகளை குறித்தோ தாவீது கவலைப்படவில்லை. ஏனெனில் எந்த நிலையிலும் தன்னை தாங்கி நடத்துகின்ற சர்வ வல்லமையுள்ள தேவனை தாவீது அறிந்திருந்தார். அவர் தன் ராஜ்யத்தை இழந்தார், குடும்பத்தினரிடம் இருந்து பிரிய நேர்ந்தது, மற்றும் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டிய நிலை இருந்தது. கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தாவீது தன் இருதய சமாதானத்தையும், தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் (வ.5,6). ஏனெனில், தேவன் தன்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார்.
பயன்பாடு: தாவீதைப் போல, நானும் இது போன்ற சூழ்நிலைகளை சில சமயங்களில் எதிர்கொள்ள நேரிடலாம். சில நேரங்களில், என் சூழ்நிலை அல்லது நான் இருக்கக் கூடிய இடங்கள், என்னைச் சுற்றி இருப்பவர்கள் எனக்கு எதிராக எழும்பும் நிலை வரலாம். எப்பக்கத்திலும் எதிர்ப்புகளை சந்திக்கக் கூடிய ஒரு நிலை உண்டாகலாம். ஆயினும், அவை நான் தேவனைப் பற்றி பாடுவதையோ, தேவ சமாதானத்தை என் இருதயத்தில் பெற்று அனுபவிப்பதையோ தடுத்து நிறுத்திட முடியாது. ஏனெனில், மனிதர்கள் நிறம் மாறலாம், ஆனால், என் அன்பின் ஆண்டவர் எப்பொழுதும் என்னுடனே இருக்கிறார். ”தேவன் ஒருவருடன் இருக்கையில் அவர் இருக்கும் பக்கமே பெரும்பான்மை” (யாரோ).
ஜெபம்: பிதாவே, நான் தனிமையை உணரும் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் நீர் என்னுடன் இருப்பதற்காக நன்றி. உன் அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக நன்றி. உம்மைப் பற்றிய என் நம்பிக்கையையுமென் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
You are not alone
Read: Genesis 5,6; Psalms 3, Matthew 2:1-15
SCRIPTURE: Psalms 3: 6 I will not fear though tens of thousands assail me on every side.
OBSERVATION: David was a known warrior who won many battles. So some may think that it is natural for a bold and brave person to express his heart like this. However, here the situation indicates that David was in a miserable position as he had to flee from his own son who rebelled against him. 2 Samuel 15:14 says that David had no other option other than escaping from his son Absalom. He experienced such a humiliation that some of his own and close aides turned against him. However, David was not worried about the number of his enemies and their darting mocks since he knew about the almighty God who can sustain him in any situation. He lost his kingdom, separated from his family, and was fleeing. Instead of worrying, David expressed his peace of heart and his confidence (v.5,6), for he was sure that God was with him always.
APPLICATION: At times, I may face a similar situation like David. Sometimes, my environment or my surroundings may not be pleasing to me, I may face opposition from all corners. However, they cannot stop me singing songs and experiencing the peace of GOD that no one can take it away. Even if I encounter tens of thousands enemies, I will not fear. Because, people may come and go, but my loving Lord God is always with me. As someone said, “One plus God is equal to majority.”
PRAYER: Father, thank you for being with me even in my difficult times when I feel loneliness. Thank you for your love and protection. Help me to be strong and bold in expressing my confidence in you. Amen.
Friday, January 1, 2021
வீழ்ச்சியின் ஆரம்பப் புள்ளி
வாசிக்க: ஆதியாகமம் 3,4; சங்கீதம் 2; மத்தேயு 1:18-25
வேத வசனம்: ஆதியாகமம் 3:1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
கவனித்தல்: தேவன் மனிதனுக்காக உருவாக்கிக் கொடுத்தவைகள் மீது ஒரு சந்தேகம் உண்டாக்கிய மிக தந்திரமான கேள்வியை நாம் இங்கு வாசிக்கிறோம். ஏவாளின் பதிலையும், அதன் விளைவால் முழு மனுக்குலமும் பாதிக்கப்பட்டதையும் நாம் அறிந்திருக்கிறாம். தன் குரலைக் கேட்கத் துவங்குபவர்களின் மனதில் சந்தேகங்களை உண்டாக்கி, சாத்தான் தன் வஞ்சக வேலையை ஆரம்பிக்கிறான். மனிதர்கள் பிசாசோடு பேசத் துவங்குகையில், அவர்களை தன் பொய், புரட்டுகளினால் ஏமாற்றுகிறான். முடிவில், ஏவாளைப் போல, அவர்கள் பிசாசின் தீய திட்டங்களுக்கு இரையாகி விடுகிறார்கள். மறுபக்கத்திலோ, தங்களிடம் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்க காரணங்கள் இருந்த போதிலும் கூட, மரியாளும் யோசேப்பும் தங்களிடம் சொல்லப்பட்ட வார்த்தையை முழுவதுமாக நம்பினார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
பயன்பாடு: என் மனதில் சந்தேகம் எழும்புகையில், பிசாசுடன் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நான் தேவனிடம் வந்து, அவரிடம் பேச வேண்டும். நான் சந்தேகங்களுடன் இருக்குமட்டும், பிசாசானவன் தன் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி என்னை வஞ்சிக்க முயல்கிறான். சந்தேகம் கொள்வது பாவம் அல்ல. ஆனால், அச்சந்தேகங்களுக்கு நான் தருகிற பதிலானது தேவனிடமிருந்து என்னைப் பிரித்து, அவருக்கெதிராக நான் பாவம் செய்யும்படி என்னை தவறாக வழிநடத்த வல்லது. என்னை நேசித்து, என் மேல் கரிசனையாயிருக்கிற தேவனை நான் தைரியமாக தொடர்பு கொள்ள முடியும். அவர் என் சந்தேகங்களைப் பொறுமையுடன் கேட்டு, ஒரு தெளிவைத் தந்து என் குழப்பங்களிலிருந்து வெளிவர எனக்குதவுகிறார். நான் சாத்தான் (அ) பிசாசி சொல்வதைக் கேட்பேனாகில், சந்தேகங்கள் குழப்பங்களையும், குழப்பங்கள் மன விரக்தியையும், அவ்விரக்தியானது தேவனுக்கும் எனக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது. நான் தேவனிடம் செல்வதைத் தெரிவு செய்தால், தேவனுடனான என் உறவு தொடர்ந்து உறுதியானதாக இருக்கும். உண்மையைச் சொல்வதானால், அது முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக நெருக்கமுள்ள அன்பின் உறவாக மாறுகிறது.
ஜெபம்: பிதாவே, நீர் எனக்கு உண்டாக்கி வைத்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் நன்றி. உம் வார்த்தைகளை சந்தேகமின்றி விசுவாசிக்க எனக்கு உதவும். சந்தேகம் வரும் நேரங்களில், அதை மூடி மறைக்காமல், பிசாசுக்கு எதிர்த்து நிற்கவும், எவ்வித தயக்கமுமின்றி உம்மிடம் ஓடி வரவும் எனக்கு உதவும். ஆமென்.
அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
2/1/2021
A starting point...
Read: Genesis 3,4; Psalms 2; Matthew 1:18-25
SCRIPTURE: Genesis 3:1 Now the serpent was more crafty than any of the wild animals the Lord God had made. He said to the woman, “Did God really say, ‘You must not eat from any tree in the garden’?”
OBSERVATION: Here we see the most cunning question that caused a serious doubt about God's provision for mankind. We all know of Eve's response and its consequences that affected the whole of humanity. Satan starts his deceiving works by casting doubts in the minds of people who pay attention to his voice. When people started to speak with the devil, he manipulates them with his lies. Eventually they become victims to his evil schemes, like Eve did. On the other hand, we see that Mary and Joseph who just believed what was communicated to them, despite they have every reason to doubt the word of God spoken through an angel.
APPLICATION: When doubts arise in my mind, I should come and speak with the LORD God, instead of speaking with the devil. As long as I remain in my doubts, Satan tries his every trick to deceive me. Doubting is not a sin. However, my response to those doubts are capable to separate me from God and to lead me to sin against God. I can confidently approach God who loves and cares for me. He patiently listens my doubts, and gives me clarity to come out of my confusions. If I choose to listen Satan, then doubts produce confusions, confusions produce frustrations, frustrations lead to a separation from God. If I choose to go to God, then my relationship with him will be intact. In fact, it becomes more closer than before.
PRAYER: Father, thank you for your every provision. Help me to believe your words without any doubt. When doubt comes, without hiding it, help me to stand against the evil and to come to you without any hesitation. Amen.
Arputharaj Samuel
+91 9538328573
2/1/2021
Thursday, December 31, 2020
கீழ்ப்படிவதற்கான சுதந்திரம்
வாசிக்க: ஆதியாகமம் 1,2; சங்கீதம் 1; மத்தேயு 1:1-17
வேத வசனம்: ஆதியாகமம் 2: 15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
கவனித்தல்: ஏதேன் தோட்டத்தில் இருந்தவை சாப்பிட மிகவும் அருமையானவையாக “புசிப்பதற்கு நலமான”வையாக இருந்தன (வ.9). முதல் மனிதன் தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் (மரத்தின்) கனியை மட்டும் சாப்பிடக் கூடாது என தேவன் சொல்லி இருந்தார். அது, அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதற்கான அனுமதி அல்ல. மாறாக, தன்னை சிருஷ்டித்த தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான சுதந்திரம் ஆகும். கர்த்தருடைய வார்த்தையானது என் மகிழ்ச்சியாகவும் தியானமாகவும் மாறும்போது, நான் முணுமுணுக்கவோ, முறுமுறுக்கவோ செய்யாமல், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். தேவன் அன்பானவராகவே இருப்பதல், அவர் சொல்பவை எப்பொழுதுமே நல்ல முடிவுகளையே தரும்.
பயன்பாடு: ஒரு புதிய நாள், அல்லது மாதம் அல்லது வருடத்தை தேவன் எனக்கு முன்பாக வைத்திருக்கிறார். என் வாழ்வின் காரியங்களை நானே செய்வதற்கான சுதந்தரத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். ஆயினும், கட்டுப்பாடற்ற, அசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்காக இந்த சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ, நான் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவேன். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது” (1 கொரி.6:12; 10:23). ஆகவே, என் கண்களின் இச்சை என்னை ஜெயிக்க விடமாட்டேன், மாறாக தேவனுடைய வார்த்தையை நான் தியானிப்பேன். நான் இதைச் செய்யும்போது, வேதாகமம் சொல்வது போல, என் வாழ்வில் எல்லா வழியிலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பேன் (சங்.1).
ஜெபம்: பிதாவே, நீர் இந்த பூமியில் எனக்காக ஏற்ப்படுத்தி இருக்கிற, கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றி. நீர் விரும்புகிற வண்ணம் அவைகளை பயன்படுத்த எனக்குதவும். பரிசுத்த ஆவியானவரே! தேவனுக்காக அர்ப்பணம் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ உதவும். ஆமென்.
அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
01/01/2021
Freedom to Obey
READ : Genesis 1,2; Psalms 1; Matthew 1:1-17
SCRIPTURE: Genesis 2: 15 The Lord God took the man and put him in the Garden of Eden to work it and take care of it. 16 And the Lord God commanded the man, “You are free to eat from any tree in the garden; 17 but you must not eat from the tree of the knowledge of good and evil, for when you eat from it you will certainly die.”
OBSERVATION: Everything available in the Garden of Eden was "good for food" (v.9). The first man was "free to eat" anything, except from one particular tree i.e. tree of the knowledge of good and evil. It was not a freedom to sin to gratify his desires. Rather, it was the freedom to obey what God the creator asked of him. When the law of the LORD becomes my delight and meditation, instead of grumbling or murmuring, I can be happy all the times. For the LORD always intends the good, for God is Love.
APPLICATION: Before me, God has placed a day or a month or a year . Further, God has given me a freewill to do things in my life. However, the purpose of this freewill is not to live an uncontrolled and unholy life. I will use this freewill to obey God in order to live a holy life in front of God and the people around me. As apostle Paul says, "“I have the right to do anything,” you say—but not everything is beneficial" (1 Cor.6:12; 10:23). Therefore, I will not allow the lust of my eyes to prevail me, but will meditate the word of God. When I do this, as the Bible says, I will prosper in my life in every way. (Ps.1)
PRAYER: Father, thank you for all the provisions and blessings you have planted on this earth for me. Help me to use them appropriately as you desire. Holy Spirit! strengthen me to live a life committed for God. Amen.
Arputharaj Samuel
+91 9538328573
01/01/2021