வாசிக்க: 1 சாமுவேல் 20,21; சங்கீதம் 34;
நான் எந்தளவுக்கு உப்பாக இருக்கிறேன்?
Scripture வேதவசனம் : மத்தேயு 5: 13 "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
Observation கவனித்தல் : உப்பானது குறிப்பிட்ட காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விரும்பின விளைவை உப்பு தரும் என்கிற எதிர்பார்ப்புடன் ஜனங்கள் அதை பயன்படுத்துகின்றனர். உணவில் சுவையைக் கூட்டுவதற்கும் பனிக்கட்டியை உருக்குவதற்கும் அது பயன்படுத்துகிறது. சிலர் பதப்படுத்துவதற்கும் வேறு சிலர் மருத்துவ காரியங்களுக்கும் அதை பயன்படுத்துகின்றனர். வீட்டில் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு நான் உப்பை பயனப்டுத்த விரும்புகிறேன். ஜனங்களை தாகமுள்ளவர்களாக்க தேவன் உப்பை பயன்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் உப்பாக இருந்து என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களை ‘ஜீவ தண்ணீருக்காக’ தாகமுள்ளவர்களாக்க - தேவனை அறிவதன் மூலமாக மாத்திரமே தீர்க்கப்படக்கூடிய தாகமுள்ளவர்களாக்க தேவன் விரும்புகிறார்.
Application பயன்பாடு: ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைக் குறித்த தாகத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும் விளம்பரத்தை தயாரிக்கவும் அதை மக்களிடத்தில் காண்பிக்கவும் ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. தேவனும் விளம்பரங்களைப் பயன்படுத்துகிறார். நானே அவருடைய நடமாடும் விளம்பரம். எனது வாழ்க்கை மக்களை எதற்காக தாகமுள்ளவர்களாக்குகிறது? என்னுடன் நேரத்தை செலவழித்த பின் ஜனங்கள் “ எனக்கு தேவனுடைய தொடுதல் தேவை” அல்லது “ நான் தேவனை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லுகிறார்களா?
Prayer ஜெபம்: ஆண்டவரே, என்ன உப்பாக மாற்றும். என்னிடத்தில் இருகிறதை என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் விரும்புவார்களாக. உம்மில அவர்கள் அதிக தாகம் கொள்வார்களாக. ஆமென்.
1Samuel 20-21; Psalm 34; Matthew 5
How salty am I?
Scripture: Matthew 5: 13 "You are the salt of the earth. But if the salt loses its saltiness, how can it be made salty again? It is no longer good for anything, except to be thrown out and trampled by men.
Observation: Salt is used for specific purposes. People use salt with an expectation that it will have a desired effect. It is used on food for flavoring and on ice for melting. Some have used it as a preservative and others for medicinal purposes. I like to use salt to make home made ice cream. I think God likes to use salt to make people thirsty. He wants me to be salty and cause those around me to thirst for “living water”—a thirst that can only be satisfied by knowing Him.
Application: Much money is spent on preparing and showing advertising that will make people “thirsty” for a specific product. God uses advertisement also. I am His walking billboard. For what does my life make people thirsty? After spending time with me, do people say, “I want an I-touch,” or “I want to know God?”
Prayer: Lord, make me salty. May those around me want what I have. May they become thirsty for more of You. Amen.
No comments:
Post a Comment