Sunday, June 26, 2011

SOAP 4 Today - இதைத் தவிர வேறு வழி இல்லை

வாசிக்க: யோனா 1- 4; 2 தீமோத்தேயு 2

Scripture வேதவசனம்: யோனா 2:4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

Observation கவனித்தல்: யோனா தீர்க்கதரிசி தேவன் தனக்குக் கொடுத்த வேலையைச் செய்ய விருப்பமில்லாதபடியால், அவர் விலகி ஓடினார். அவர் எதிர் திசையில் சென்ற கப்பலில் ஏறி, புயலினிமித்தம் கடலில் தூக்கி எறியப்பட்டார். கடலுக்குள்ளே அவரை ஒரு பெரிய மீன் விழுங்கும்படி தேவன் செய்தார்.

மீனின் வயிற்றில் யோனாவுக்கு நோக்கிப் பார்ப்பதற்கு தேவனைத் தவிர வேறு யாரும் இல்லை. வேறு யாரிடம் தான் தீர்க்கதரிசி திரும்பியிருக்க முடியும்? தேவன் மட்டுமே அவர் சத்தத்தைக் கேட்டு, அவனுக்கு உதவ முடியும்.

Application பயன்பாடு: உதவிக்காக மனிதர்களைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்க்கும்போது அவர் கனப்படுத்தப்படுகிறார். எனக்கு இருக்கும் அனேக சாத்தியக் கூறுகளில் இருந்து நான் அவரைத் தெரிவு செய்து கொள்ளவில்லை எனில், யோனாவுக்குச் செய்தது போல வேறு வழியே இல்லை என்று உணரக் கூடிய நிலையை அவரால் உண்டாக்கமுடியும். அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது போன்ற சூழ்நிலையில் வைக்குமளவுக்கு அவர் என்னை நேசிக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் போக வேண்டுமென்று நீர் விரும்புகிற இடத்திற்கு நான் செல்வேன். அருமை ஆண்டவரே, மலையானாலும் அல்லது சமதளமானாலும் அல்லது கடலானாலும் நீர் என்னிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர் என்றே பிரிய கர்த்தாவே கேட்பேன். நான் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அவ்வண்ணமே நானும் இருப்பேன். ஆமென்.


No choice but one

Jonah 1-4; 2Timothy 2

Scripture: Jonah 2:4 I said, ‘I have been banished from your sight; yet I will look again towards your holy temple.’

Observation: The prophet did not want to take on the assignment given to Him by God so he was running away. He took a ship going the opposite direction and in a storm had been thrown into the sea where God had provided a great fish to swallow him. (Although Exploration Place , in Wichita , teaches godless evolution, they recently had a display of the jaws of a fish that would be more than large enough to swallow a man. I should thank them for their part in validating the book of Jonah.)

Now the prophet had no where else to look. To whom else could the prophet turn? Only God could hear him and only God could help him.

Application: God is honored when I choose Him above others. But if I do not choose Him out from among many possibilities He is well able to limit my choice, like Jonah, to just one! It is good that God cares enough for me to put me in situation where I have no choice but Him.

Prayer: Lord, I remember singing, “I’ll go where you want me to go, Dear Lord; o’re mountain or plain or sea. I’ll say what you want me to say dear Lord. I’ll be what you want me to be.” Lord, it is still true. Amen.

No comments:

Post a Comment