Monday, December 12, 2011

SOAP 4 Today - மிகவும் பொருத்தமானவர்

Scripture வேதவசனம்: எபிரேயர் 7:25 மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
26. பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
27. அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

Observation கவனித்தல்: இயேசுவே பாவத்திற்கான பரிபூரண பலியை செய்த மிகவும் ஏற்ற பிரதான ஆசாரியன் ஆவார். அவர் என் தேவைகளைச் சரியாகச் சந்திக்கிறார்.

Application பயன்பாடு: அனேக சமயங்களில். எனக்குத் தேவையானவைகளை விட மிகவும் குறைவானவைகளைக் கொண்டு நான் சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று தெரிவுகளில் என் தேவைக்கு மிகவும் சமீபமாயிருக்கிறதை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும். எனக்குத் விரும்பியபடியே அது இல்லாவிடினும் நான் அதைத்தான் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், நான் இயேசுவை அதிகமதிகமாக அறிந்து கொள்ளும்போது, அவரே என் தேவைகளைச் சரியாகச் சந்திக்கிறவர் என்பதை நான் அதிகமதிகமாக நிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் தேவையும் அதற்கு நீர் அளிப்பவைகளும் மிகவும் பொருத்தமானவைகள். ஆமென்.

No comments:

Post a Comment