Scripture வேதவசனம்: 1கொரிந்தியர் 13:12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
Observation கவனித்தல்: எவ்வளவு சிறப்பான வாக்குத்தத்த ! எனது தற்போதையை அறிவின் எல்லை ஒழிந்துவிடும். கண்ணாடியில் மங்கலாகத்தெரியும் பிம்பத்தின் மூலமாக நான் இப்போது காண்கிறேன். வேத விளக்கவுரைகள் மற்றும் வியாக்கியானங்கள் மூலமாக நான் தேவனைப் பற்றிய அறிவைப் பெறாமல், நேரடியாக பரிபூரணமான ஒரு உறவை அவருடன் நான் பெற்றிருக்கிறேன்.
Application பயன்பாடு: இப்போது நான் தேவனைக் குறித்து அறிந்திருப்பது மிகவும் ஆச்சரியமானதாக் இருக்கிறது எனில், நான் அவரை நேரடியாகவும் பரிபூரணமாகவும் அறிந்து கொள்ளும்போது எவ்வளவு ஆச்சரியமானதாயிருக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் இப்போது அவரைப் பற்றி அறிந்திருக்கும் அவ் அவருடைய ஞானம், வல்லமை மற்றும் எப்படி எல்லாவற்றையும் செய்கிறதற்கான சக்தி ஆகியவைற்றைக் குறித்து எனக்கு பிரச்சனை எழும்புவதில்லை. ஆனால் சில வேளைகளிலொ “ஏன்” என்ற கேள்விகள் எழும்பி என்க்கு பிரச்சனையை உண்டாக்குகின்றன. அவருடைய சமாதானம் என் உள்ளத்தை நிரப்பும்போது, நான் “ஏன்” எனத்தோன்றும் கேள்விகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை முழுமையாக அறிந்திருப்பது போல நானும் உம்மை முழுமையாக அறிந்திருக்க உதவும். வாழ்க்கையில் “ஏன்” எனத் தோன்றும் கேள்விகளுக்குப் பதில்களைப் புரிந்து கொள்ள உதவும். ஆமென்.
No comments:
Post a Comment