Scripture வேதவசனம்: யோவான் 3:28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
30. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
Observation கவனித்தல்: யோவான்ஸ்னானனின் பணி முடியும் தருவாயில் இருந்தது. இயேசுவுக்காக வழியை ஆயத்தம்பண்ணும் தன் வேலையை அவன் செய்து முடித்தான். அவன் இயேசுவை அறிமுகப்படுத்தினான். யோவானின் பேச்சைக் கேட்க வந்தவர்கள் இப்பொழுது இயேசுவின் வார்த்தையைக் கேட்கச் செல்கின்றனர். அவன் தன் குறிக்கோளை - தன் வேலையை புரிந்து கொண்டான். இப்பொழுது யோவான் பின்னுக்குச் சென்று, இயேசு கவனத்தைப் பெறத் துவங்குகிறார். யோவானின் மகிழ்ச்சி பூரணமானதாக இருந்தது.
Application பயன்பாடு: எனக்கு வயதாக ஆக, என் தலைமுறையானது வரக்கூடிய சந்ததிக்கான அஸ்திபாரத்தைப் போடுவதைக் காண்கிறேன். நாம் சிறுகவும் நம் பேரப் பிள்ளைகள் பெருகவும் விரும்புகிறோம். உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலைப் பொறுத்தவரையில் பெரும் பிரச்சனைகள் வரக் காத்திருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு இயேசுவை அறிமுகம் செய்வது என்பது மிகவும் முக்கியமானது ஆகும். நாம் இவ்வுலகத்தை விட்டுக் கடந்து செல்லும்போது, அவர்கள் அவரை நேசித்து, அவரை நம்புவது என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் விசுவாசத்தில் தொடர்ந்து, நம் விசுவாசத்தைக்காட்டிலும் அவர்களின் விசுவாசம் உறுதியாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய தாக்கம் என் மனதிலும் சிந்தையிலும் உறுதியாக இருக்கட்டும். அதை நான் மற்றவர்களுக்கும் கடத்த உதவும். ஆமென்.
No comments:
Post a Comment