Scripture வேதவசனம்: 1 கொரிந்தியர்.12:14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களை உடையதாயிருக்கிறது.
Observation கவனித்தல்: சபையாகிய, கிறிஸ்துவின் சரீரத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார்.ஒரே சரீரம் என்பதௌ வலியுறுத்தி அவர் நிறைவு செய்கிறார். இப்பொழுது அந்த ஒரே சரீரம் அனேக அவயவங்களைக் கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார். அனேக அவயவங்களின் மதிப்பு அவற்றின் வித்தியாசமே. அவை அனைத்தும் ஒன்றுபோல் இருந்தால் அவை அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும்படி பயன்படுத்தப்பட முடியாது. சரீரமும் செய்து முடிக்க வேண்டியவைகளைச் செய்து முடிக்க பலனற்றதாக இருக்கும். அவயவங்களில் காணப்படும் வேறுபாடுகளே அவற்றை மதிப்பு மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
Application பயன்பாடு: கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் வேறொரு நபரைப் போல இருக்கும்படி நான் தேவனால் உருவாக்கப்படவில்லை. நான் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளும்போது சரீரத்திற்கு பயனுள்ளவனாக இருக்கிறேன், அது எனக்கு தனித்துவத்தைக் கொடுக்கிறது. கிறிஸ்துவின் வாழ்க்கை என்னை அவர் சரீரத்தின் ஒரு அவயவமாக மாற்றுகிறது. என் வேறுபாடுகள் என்னை பயனுள்ள ஒரு அவயவமாக மாற்றுகிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவேம் உம் இராஜ்ஜியத்தில் பயனுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும். என் வேறுபாடுகளை வாய்ப்புகளுக்கான வாசல்களாகவும் அழைப்புகளாகவும் காண எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment