Thursday, December 13, 2012

SOAP 4 Today - தேவனப் பிரியப்படுத்துதல்

Scripture வேதவசனம்:   எபிரேயர் 11:1  1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
எபிரேயர் 11: 6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

Observation கவனித்தல்:    தேவனுடைய தயவைப் பெறுவதற்கு அவர் எந்தவொரு நிபந்தனையையும் அவர் விதித்திருக்க முடியும்.  அனேக திறமைகள் உள்ளவர்களை அவர் தெரிந்தெடுத்திருக்கலாம். அழகாக இருப்பவர்களை அல்லது மிகவும் அறிவுள்ளவர்களை... அல்லது சாதனையாளர்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். இந்த பகுதியில் நாம் மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் வேண்டுமானால் சிறந்தி விளங்கலாம், ஆனால் தேவனுடன் ஒப்பிடும்போது நாம் குறைவு பட்டவர்களாகவே இருக்கிறோம். தேவன் தம் ஆசீர்வாதங்களுக்கான நிபந்தனையாக வைத்திருப்பதில் இருந்து நாம் ஆரம்பிப்போம். தேவன் விசுவாசத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். நம் விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்துகிறது.
Application பயன்பாடு: தேவன் மீதான விசுவாசம் மிகவும் நியாயமானது. அதிக எடை உள்ள ஒன்று தரையைத் தொடாமல் வானிலே எடுத்துச் செல்லப்பட முடியும் என்பதைப் போல இதுவும் நம்பத்தக்கதே.  நான் பணம் கொடுத்தால் விமானம் என்னைச் சுமந்து செல்லும் என்பது போல எனக்கு இது நம்பத் தக்கதாக இருக்கிறது.  தேவன் இந்த அகிலத்தையும் அவர் மகிமைக்காக படைத்தார் என்பதை நம்புவதும் எனக்கு ஏற்புக்குரியதாகவே இருக்கிறது. நான் தேவனை ஏற்றுக் கொண்டு அவர் என்னை நேசிக்கிறார் என்பதை விசுவாசிக்கும்போது அவர் என் மேல் பிரியமாக இருக்கிறார். நான் அவரையும் அவருடைய வார்த்தையையும் நேசிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் நம்பத்தக்கவர், உம்மை நம்புவது என் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஆமென்.

No comments:

Post a Comment