Scripture வேதவசனம்: 1 தீமோத்தேயு 4:13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
Observation கவனித்தல்: புதிய சபையை வழிநடத்துவதற்காக பவுல் தீமோத்தேயுவை எபேசுவில் விட்டுச் சென்றிருந்தார். இந்த வசனத்டில் பவுல் இளைஞனான தீமோத்தேயுவின் ஊழியத்திற்காக சில ஆலோசனைகள் கூறுகிறார். எபேசு சபையினரிடம் சொந்தமாக வேதாகமம் ஒவ்வொருவரிடமும் இல்லாதிருந்ததது. வேத வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் விசுவாசிகளுக்கு பொதுவான வேத வாசிப்பு, பிரசங்கங்கள் மற்றும் போதனை தேவையாயிருக்கிறது. இன்று நம் கைகளில் வேதாகமம் இருக்கிறது, நாம் அதை அனுதினமும் வாசிக்க வேண்டும். வேதாகமம் உள்ள எல்லா இடங்களிலும் அவை வாசிக்கப்படுகிறதாம் பிரசங்கிக்கப்படுகிறதா மற்றும் போதிக்கப்படுகிறதா என சபைத்தலைவர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
Application பயன்பாடு: இந்த SOAP தியானங்கள் மூலமாக தேவன் என்னுடன் பகிர்ந்து கொள்பவைகளில் நான் களிகூருகிறேன். பரிசுத்த ஆவியானவர் என்னை எழுதச்செய்கிறார் என்று நான் நம்புபவைகள் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதை அறியும்போது இன்னும் மகிழ்கிறேன். இத்தியானங்கள் ஒருவரின் தனிப்பட்ட வேத வாசிப்பை அதிகரித்திருப்பதை அறியும்போது நான் மிகவும் மகிழ்கிறேன். அது மிகவும் பெரிய ஒரு காரியமாக இருக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே,
இந்த SOAP தியானங்கள் மற்றவர்களை விசுவாசத்தில் கட்டவும், அவர்கள் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும்படி என்னை பயன்படுத்தும்.ஆமென்.
No comments:
Post a Comment