Scripture வேதவசனம்: ஆதியாகமம் 37:28 அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக்
குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது
வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக்
கொண்டுபோனார்கள்.
Observation கவனித்தல்: தனது பெற்றோரும் சகோதரர்களும் தனக்கு முன்பாக தலைவணங்கி நிற்பதைப் பற்றிய ஒரு பெரிய தரிசனத்தை தேவன் யீசேப்புக்குக் கொடுத்திருந்தார். ஆனால் யோசேப்பு இப்பொழுது தன் சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டுவிட்டார். தரிசனத்தின் தேவன் எங்கே போனார்? இப்படி நடக்க அவர் எப்படி அனுமதித்தார்? நாம் அதன் பின்னர் நடந்தவைகளை வாசிப்பதில் இருந்து, பார்வோனின் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லக்கூடிய இடத்தில் சரியாக யோசேப்பு இருக்கும்படியாக தேவன் அவனை அவ்விடம் வைத்தார் என்பதை நாம் அறிகிறோம். அவன் செய்ய வேண்டியவைகளைச் செய்து முடிக்கவோ அல்லது ஏதேனும் வியாபார ஒப்பந்தங்களையோ செய்ய வேண்டியதாயிருக்க வில்லை. அவன் சிறைச்சாலைக்குச் சென்று, பார்வோனின் உத்தரவின்படி உடனே அவனுக்கு முன்பாக கொண்டு வரத்தக்க நிலையை அடைந்தான். யோசேப்பின் சகோதரர்களின் பொல்லாத எண்ணங்கள் தேவனின் வாக்குத்தத்தங்களுக்குத் தடையாக இருக்கவில்லை, மாறாக அவை வாக்குத்தத்த நிறைவேறுதலுக்கு நேராக அவனை உந்தித் தள்ளின.
Application பயன்பாடு: இங்கே எனக்கான கேள்வி என்னவெனில், தேவன் அவருடைய நோக்கத்திற்காக என் வாழ்க்கையைப் பயன்படுத்தமுடியாதபடிக்கு எதையாகிலும் செய்யக்கூடிய அளவுக்கு சக்தி உள்ள மனிதன் எவராகிலும் உண்டா? நான் தேவனைப் பற்றி அறிந்து கொள்கையில், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் (நன்மையும் தீமையும்) நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28)
Prayer ஜெபம்: கர்த்தாவே, சங்கீதம்118:6ல் எழுதப்பட்டிருக்கிறது போல: கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? ஆமென்
No comments:
Post a Comment