ஜனவரி 5: ஆதியாகமம் 12-14; லூக்கா 5
Scripture வேதவசனம்: லூக்கா 5:3 சீமோனுக்கு
உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள்
சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு
மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
4 இயேசு
போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச்
செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்.5 சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். 6 மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின.
Observation கவனித்தல்: அது மீன்பிடிக்கிறதற்கான நேரம் அல்ல என்று மீன்பிடிப்பதில் தேறியவர்கள் தீர்மானித்தனர்.
அது படகை நிறுத்தி, வலைகளைக் கழுவி வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமாக இருந்தது. அவர்கள் பக்ல வருட அனுபவங்கள் நிறைந்த மீனவர்களாக இருந்தனர். ஆனால் சீமோன் பேதுரு இயேசு சொன்னதைக் கேட்டு சிரித்து, அவர் சொன்னபடியே செய்தான்.
Application பயன்பாடு: சில நேரங்களில், எனக்கு எல்லாம் தெரியும் என்றும், நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்றும் எண்ணுகிறேன். தேவன் என்ன நினைக்கிறார் என்பது நேர விரயம் என்று நினைக்கிறேன். அவர் சொன்னதைச் செய்யாததினிமித்தமாக நான் எத்தனை தடவை அவருடைய அற்புதங்களை தவறவிட்டிருக்கிறேன் என்று ஆராய்ந்து பார்க்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் சொன்னதைச் செய்வதற்கு, உம் வார்த்தை ஒன்றே எனக்கு போதுமான காரணமாக எப்பொழுதும் இருக்கிறது. ஆமென்.
No comments:
Post a Comment