Scripture வேதவசனம்: எபிரேயர் 3:7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,
8. வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
10. ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;
11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
12. சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

Observation கவனித்தல்:
சர்வ வல்லமையும், ஞானியுமான தேவன் கோபம் அடைகிறார் என்பதைப் பெரும் பிரச்சனை என்பதாக கருதுவார்கள். கோபமானது அன்பைப் போல தீவிரமானதாக இருக்கலாம்.
Application பயன்பாடு: எனக்குப் பிரியமான வசனங்களை மட்டும் வாசித்து, எச்சரிப்புகளை வாசிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறாகும். என் வழியில் வரும் ஆபத்துகளைக் குறித்து அறிந்தும், தேவன் என்னை எச்சரிக்காவிடில், அவர் என்னை நேசிக்க மாட்டார். அவருடைய எச்சரிப்புகளை நான் கவனிக்காவிடில், நான் அவரை அதிகமாக நம்பாமல் இருப்பேன். நான் எப்படி பேசுகிறேன், செயல்படுகிறேன் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எப்பொழுதுமே உம் கோபத்தில் நியாயமுள்ளவராகவும், காலைதோறும் உம் கிருபைகள் புதிதானதாகவும் இருக்கிறது. என்னை எச்சரிக்கும் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment