Thursday, June 30, 2011

SOAP 4 Today - நன்மை செய்தல்

வாசிக்க: ஏசாயா 1-3; தீத்து 3.

Scripture வேதவசனம்: தீத்து 3: 4. நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
6. தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,
7. அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
8. இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

Observation கவனித்தல்: இங்கே 8வது வசனத்திலும், மீண்டும் 14வது வசனத்திலும் “நன்மை செய்வதின்” முக்கியத்துவத்தை பவுல் கூறுகிறார். நமது இரட்சகராகிய தெவனின் அன்பும் இரக்கமுமே நன்மை செய்வதற்கான காரணம் ஆகும்.

Application பயன்பாடு: நான் “நன்மை செய்வதற்கான” நோக்கம் என்னை நல்லவனாகக் காண்பிப்பதோ அல்லது மற்றவர்கள் என்னை நல்லவன் என்று எண்ணுவதற்கோ அல்ல. தேவன் எனக்கு செய்தவைகளுக்குப் பதிலாக நான் செய்யவேண்டிய கடமையும் கூட அல்ல. நான் அவரை நேசிப்பதினால் மற்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலமாக அவர் மீதான என் அன்பை நான் வெளிப்படுத்துகிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் இன்று செய்கிற நல்ல செயல்கள் எவரையாவது உம்மைக் குறித்து எண்ணும்படிச் செய்யட்டும். ஆமென்.

No comments:

Post a Comment