Tuesday, July 19, 2011

நமக்குள் இருந்துதான் யுத்தம் ஆரம்பமாகிறது

வாசிக்க: 2 நாளாகமம் 29-31, யாக்கோபு 4.

Scripture வேதவசனம்: யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 9. நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

Observation கவனித்தல்: எசேக்கியாவின் வெற்றிக்குக் காரணம் அவன் தேவனை நம்பி, அவரைச் சார்ந்து அவரின் கற்பனைகளைக் கைக்கொண்டதுதான் என்பதை நான் நேற்று குறிப்பிட்டேன். இங்கு யாக்கோபு நிருபத்திலும் நாம் அதேப் போன்றதொரு முன்னேற்ற வழிமுறையைக் காண்கிறோம். தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு முன்பாக பிசாசை எதிர்த்து நிற்க வேண்டும். தேவன் எனக்கு அருகில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனில் நான் முதலாவதாக தேவனுக்குப் பக்கத்தில் வரவேண்டும். தேவனால் உயர்த்தபடுவதற்கு முன்பு நான் என்னைத் தாழ்த்தவேண்டும்.

Application பயன்பாடு: தேவன் தரும் அனேக வெற்றிகள் சரியான இருதய மனப்பான்மைக்குப் பின்னரே வருகின்றன. எனக்குள் எழும்பும் யுத்தத்டில் ஜெயிப்பதற்காக நான் பரிசுத்த ஆவியானவருடன் இணைந்து செயல்படும்போது, தேவன் என் சூழ்நிலைகளில் இடைபட்டு எனக்குச் சுற்றிலும் வெற்றியை வரப்பண்ணுகிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மை என் சிந்தையில் இருத்தி உம் அருகே வருகிறேன். உமக்குக் கீழ்ப்படிந்து என்னை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். உமது ஊழியனாக என்னைக் கண்டு உமக்கு முன்பாக என்னைத் தாழ்த்துகிறேன். ஆமென்


No comments:

Post a Comment