Sunday, November 6, 2011

SOAP 4 Today - தெரிவு செய்துகொள்ளும் உரிமைகள் = அன்பின் நிரூபணம்

Scripture வேதவசனம்: கலாத்தியர் 5: 1. ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.

Observation: நம் சுதந்திரம் தேவனுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். தெரிவு செய்து கொள்ளும் உரிமை நமக்கு உரியது. ஆகவே நாம் அவரை நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தெரிவு செய்துகொள்ளும் உரிமைகளின் மூலமாக அன்பு வெளிப்படுத்தப்படுகிறது. தெரிவு செய்து கொள்ளும் உரிமை இல்லை எனில், அது அன்பின் வெளிப்பாடாக இருக்காது. ஒரு தெரிவாக ஆரம்பிக்கும் சில தெரிவுகள் எஜமானனாக மாறி வழிநடத்தக் கூடும். நம் சுதந்திரத்தை பாதுகாக்கும் தெரிவுகளை எடுப்பது நமக்குள்ள பொறுப்பு ஆகும். .

Application பயன்பாடு: தனிப்பட்ட முறையில் நான் அதிகம் விரும்பாத போதும் , “ நான் உன்னை நேசிக்கிறேன்” என்று என் மனைவியிடம் கூறி அவளுக்கு உதவுவது தெரிவுகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகும். தேவனிடத்திலும் இது போலவே இருக்கிறது. தேவனுக்கு ஊழியம் செய்வதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரை நான் நேசிப்பதினால் , என் அர்ப்பணத்துக்கு அவர் பாத்திரர் என்று நான் நம்புவதால் எடுக்கும் தெரிவு ஆகும். தியாகம் அதிகமாக இருந்தால் அன்பின் வெளிப்பாடும் அதிகமாக இருக்கும் என்பதை நான் நினைவுகொள்ள வேண்டும். நான் யாரை நேசிக்கிறேன், எவ்வளவு நேசிக்கிறேன் என்பதற்கு என் தெரிந்து கொள்ளுதலே நிரூபணம் ஆகும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மைப் பிரியப்படுத்த நான் இன்று என்னச் செய்யக் கூடும்? ஆமென்.

No comments:

Post a Comment