Thursday, November 10, 2011

SOAP 4 Today - தேவனுடைய மகிமைக்காக

Scripture வேதவசனம்: 1கொரிந்தியர் 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

Observation கவனித்தல்: என் வாழ்க்கையைச் சுற்றிலும் நான் கட்டி எழுப்புவதற்கு எடுக்க வேண்டிய ஒரு நல்ல வேத வசனம் இங்கே காணப்படுகிறது. எனினும், நான் இவ்வசனத்தின் படி ஒவ்வொரு நாளும் செயல்படாமல் என் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முடியாது.

Application பயன்பாடு: சாப்பிடுவது, குடிப்பது போன்ற நான் முக்கியமானதாகக் கருதாத விசயங்களிலும் கூட நான் தேவனுடைய மகிமைக்காக இருக்க வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்கு நலமாகத் தோன்றுகிறபடு நான் வாழ விரும்புகிறேன். உமக்கு சேவை செய்வதை நான் மிகவும் உயர்வானதாகக் கருதுகிறேன் என்று மக்கள் எளிதாகக் காணும்படிக்கு இருக்க உதவும். ஆமென்.


No comments:

Post a Comment