Scripture வேதவசனம்: மத்தேயு 18:5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
Observation கவனித்தல்: என் வீட்டிற்குள் ஒருவரை நான் வரவேற்கும்போது குறைந்தது மூன்று வாக்கியங்களைச் சொல்வதுண்டு.
1. நீங்கள் இங்கு வந்ததில் எனக்கு மிகவும்
2. உங்கள் நண்பரின் வீட்டிற்குள் நீங்கள்
3. உங்களைச் சிறப்பானவர்களாக நாங்கள் கவனிப்போம்.
குழந்தைகளிடமும் நாம் இதே போன்ற மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். நாம் அவருடைய நாமத்தில் சிறு பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் அவரை வரவேற்கிறோம் என்று இந்த வசனம் நமக்கு வாக்குப்பண்ணுகிறது. சிறு பிள்ளைகளுக்கு நான் செய்யும் நன்மையோ, தீமையோ, இயேசு அவைகளை தனக்குச் செய்யப்படுவதாக எடுத்துக் கொள்ளுகிறார்.
Application பயன்பாடு: இயேசுவை என் வாழ்க்கையில் சொந்தமாக்கிக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்கிறேன் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் உண்மையாகவே விரும்புகிறேன். என் இருதயம் அவர் விரும்பத்தக்க ஒரு இடமாக இருக்க வேண்டும். அவர் தன் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை என்னிடம் இருக்கையில் பெற வேண்டும். இவ்வளவு மதிப்புமிக்க விருந்தினரை தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் மோசமான மனப்பான்மைக்கு இடங்கொடுத்தல் போன்றவற்றின் மூலமாக நான் துக்கமடையச் செய்யக் கூடாது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மையும் சிறு பிள்ளைகளையும் எனது முக்கியமான நண்பர்களாக வரவேற்கிறேன். என் வாழ்வில் வந்து தங்கும்படி உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment