Scripture வேதவசனம்: எபிரேயர் 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
Observation கவனித்தல்: “அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” என்பது எவ்வளவு வல்லமையான வரிகள். இவை தன்னை தேவ குமாரன் என்று அழைப்பதை ஒருபோதும் தடை செய்யாத இயேசுகிறிஸ்து தம்மை மனுச குமாரன் என்று அப்போதும் சொல்லிக் கொண்டதை நமக்கு திரும்பவும் எடுத்துக் கூறுகிறது. அவர் தேவ குமாரனாக இருந்ததை நிறுத்திக் கொள்ள வில்லை. ஆனால் ஒரு மனிதனுக்கு உள்ள வரையறைக்குள் வாழ்வதற்காக அவர் தன் தெய்வீக தன்மைகளைச் சார்ந்து கொள்வதை விட்டுவிட்டார். பிலிப்பியர் 2:5-8 வசனங்கள் கூறுவது போல, இயேசு தம்மைத் தாமே வெறுமையாக்கினார். ஒரு மனிதனாக, நாம் எவ்வாறு வாழ்வேண்டும் என்பதற்கு இயேசு மிகவும் சரியான முன் மாதிரியாக இருக்கிறார். ஒரு மனிதனாக, அவர் பாவமே செய்யாமல் நம் பாவங்களுக்காக மரித்ததின் மூலமாக நம் பாவங்களுக்கான பரிகாரமாக பரிபூரணமான பலியாக இருக்கிறார். ஒரு மனிதனாக இப்பூமியில் வாழ்ந்ததினால், நமக்காகப் பரிந்து பேசும் சரியான பிரதான ஆசாரியராக இருக்கிறார்.
Application பயன்பாடு: நான் தேவனுடைய குடும்பத்தின் ஒருவனாகும்படி இயேசு மனுக் குடும்பத்தில் ஒருவரானார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் திட்டத்தை எந்தளவுக்கு அதிகமாக அறிந்துகொள்கிறேனோ அவ்வளவாக ஆச்சரியமும் அடைகிறேன். சிருஷ்டிகரே சிருஷ்டிப்பின் பாவத்திற்காக பலியாகுவது என்ற திட்டம் எந்த மனிதனாலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது ஆகும். ஆமென்.
No comments:
Post a Comment