Tuesday, December 13, 2011

SOAP 4 Today - தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட ஒரு நகரம்

Scripture வேதவசனம்: எபிரேயர் 11:15 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
16. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

Observation கவனித்தல்: வயதானவர்கள், தாங்கள் முன்பு இருந்த இடத்தைப் பற்றி நினைத்து, அங்கே திரும்ப விரும்புவார்கள். சிலர் தாங்கள் கேள்விப்பட மட்டுமே செய்திருந்த இடத்திற்குக் கூடச் செல்ல விரும்புவார்கள். ஆனாலும் நம் முதிர்ச்சி கர்த்தருக்குள் இருக்கும் போது, நாம் தேவனால் நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற சிறந்த தேசத்தையே எதிர்நோக்கி இருப்போம்.

Application பயன்பாடு: ஹவாய் தீவில் பல வருடங்கள் வாழ்ந்ததினால், யாராகிலும் அங்கே தாங்கள் போவதற்கு உள்ள அதிக விருப்பத்தைப் பற்றிக் கூறும் போது, “அது அழகான தேசம் தான், ஆனால் நீங்கள் பரலோகம் செல்லும்போது நீங்கள் இழந்து விட்டோமே என்று எண்ணுமளவுக்கு எதுவும் இருக்காது” என்பேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுகிறதைக் குறித்துச் சிந்திக்கும்போது நான் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகிறேன்! நீர் எனக்காக இரு இடத்தை ஆயத்தம் பண்ணுகிற வேளையில், நானும் என் இருதயத்தை ஆயத்தம் பண்ணுகிறதில் தெளிவுள்ளவனாக இருக்க உதவும். ஆமென்.

No comments:

Post a Comment