Friday, December 16, 2011

SOAP 4 Today - பயனற்றது/பயனுள்ளது

Scripture வேத வசனம்: 1பேதுரு 4: 8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
9. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
10. அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

Observation கவனித்தல்: ஒவ்வொருவருக்கும் வரங்களும் தாலந்துகளும் அருளப்ப்பட்டிருக்கிறது. அவை நம்மை வாழ்வில் பிரயோஜனமுள்ளவர்களாகச் செய்கிறது. இவ்வரங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவைகள் அல்ல, கிருபையாக அருளப்பட்டவை ஆகும். அவ்வரங்களை வளர்ப்பதற்கு நாம் முயற்சித்திருக்கலாம். ஆனால் அவை பிறக்கும் போதே நம்முடன் கூட வரும் விருப்பங்கள், மனப்பான்மைகள் மற்றும் திறமைகள் ஆகும். நாம் மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கும்படி அவை நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நம் பிரயோஜனத்துக்காக அவை கொடுக்கப்படாமல் நாம் முதலாவதாக மற்றவர்களுக்குப் பிரயோஜனமுள்ளவர்களாகும் படிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

Application பயன்பாடு: சுயநலமுள்ளவனாக தேவன் என்னைப் படைக்காமல் சுயநலமில்லாதவனாகவே படைத்திருக்கிறார். நான் மற்றவர்களுக்கு உதவும்படி அவர் எனக்கும், மற்றவர்கள் எனக்கும் உதவும் படி அவர் பலனளிக்கிறார். நான் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள மற்றவர்களை நான் பரஸ்பரம் சார்ந்து இருக்கிறேன். கிறிஸ்தவ ஐக்கியத்தில் இருந்து விலகி இருப்பது என்பது நான் கொடுக்கக் கூடிய பலன்களை மற்றும் பெறக் கூடிய பலன்களை நிறுத்தி வைப்பது ஆகும். என்னிடத்திலிருந்து மற்ற்வர்கள் பெறக்கூடிய பலன்களா நான் நிறுத்து வைப்பதினால் நான் அவர்களை வேதனைப் படுத்துகிறேன். நான் மற்றவர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய பலன்களைப் பெற முடியாதபடிக்கு அவைகளை தடுப்பதினால் என்ன்னை நானே வேதனைப் படுத்திக் கொள்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் பயனற்றவன் என்பதாக உணருவது மிகவும் பயங்கரமானது ஆகும். நான் பயனுள்ளவனாக இருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவும். ஆமென் .


No comments:

Post a Comment