Monday, December 5, 2011

SOAP 4 Today - பாக்கியம் & மகிழ்ச்சி

Scripture வேதவசனம்: பிலிப்பியர்) 1:4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Observation கவனித்தல்: பிலிப்பி பட்டண விசுவாசிகளுக்காக பவுல் அடிக்கடி ஜெபித்தார். சில சமயத்தில் பொத்த சபைக்காகவும் சில சமயங்களில் ஒவ்வொருவர் பெயரைச் சொல்லியும் ஜெபித்தார். அவர் எப்படி அல்லது எப்பொழுது ஜெபித்தாலும் மகிழ்ச்சியாக ஜெபித்தால், அல்லது சந்தோசம் நிறைந்த இருதயத்துடன் ஜெபித்தார்.

Application பயன்பாடு: ஒரு சிறு குழந்தை தன் நண்பனைப் பற்றி அவன் எனக்கு மிகவும் பிரியமானவன் என்று சொன்னது. தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நாம் சொல்வதில் மகிழ்ச்சியடையக்கூடிய நபர்களின் பெயர்கள் உண்டு. அவர்களுக்காக ஜெபிக்கும்போது நான் இருதயத்தில் மகிழ்ச்சியுடன் ஜெபிக்கிறேன். மற்றவர்கள் எனக்காக ஜெபிக்கும்போதும் இது போல மகிழ்ச்சியாக ஜெபிக்கும்படியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, மற்ற்வர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களுடைய பெயர்களை உம் சிங்காசனத்துக்கு முன்பாகச் சொல்வதும் எவ்வளவு பாக்கியமும் மகிழ்ச்சியுமானதாக இருக்கிறது. ஆமென்.

No comments:

Post a Comment