Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 14:2 அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.
3. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.000 who had been redeemed from the earth.
Observation கவனித்தல்: சங்கீதப் புத்தகத்தில் புதிய பாடல்களைப் பாடும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுவதை காண்கிறோம். இங்கு வெளிப்படுத்தல் புத்தகத்தில் மீண்டுமாக நாம் புதிய பாடல்களைப் பாடுவதைக் காண்கிறோம்.
Application பயன்பாடு: நான் கர்த்தருடன் நடக்கும்போது, என் உள்ளத்தில் எப்பொழுதும் புதிய பாடல் இருக்க வேண்டும். கர்த்தருக்குப் புதுப்பாடல் பாடப்படுவதை நான் கேட்கும்போது மகிழ்ச்சியடைய வேண்டும். ஏற்கனவே எனக்கு அனேக பழைய பாடல்களும் பாமாலைகளும் தெரியுமாதலால் நான் இரட்டிப்பான ஆசீர்வாதம் உடையவனாக இருக்கிறேன். நான் பழைய பாடல்களை எல்லா நாளும் பாடி, புதிய பாடல்களை மற்ற விசுவாசிகளுடன் கூடும்போது பாடலாம். என் தலைமுறையிலன் பாடுகளில் இருந்து ஒரு புதிய தலைமுறை புதிய பாடலுடன் எழும்புவதினால் நான் மகிழ்ச்சியடைய முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மை உயர்த்துகிற எதுவும் என்னை ஆசீர்வதிக்கிறது. துதி மற்றும் ஆராதனையின் புதிய வெளிப்பாடை நான் காணும்போது என் இருதயம் பூரிக்கிறது. ஆமென்.
No comments:
Post a Comment