Scripture வேதவசனம்: மாற்கு 7:20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் (இயேசு).
Observation கவனித்தல்: சாப்பிடுவதற்கு முன்பு கைகளைக் கழுவாமல் இருந்ததினால், அசுத்தமான கைகளுடன் இயேசுவின் சீடர்கள் சாப்பிட்டனன் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இவ்வசனங்களில் ஒரு மனிதனை உண்மையிலேயே அசுத்தமாக்குவது எது என இயேசு தம் சீடர்களுக்கு விளக்கினார்.
Application பயன்பாடு: உலகத்தில் அல்ல, என் இருதயத்திலேயே பிரச்சனை உள்ளது. பாவங்களை ஜெயித்தவன் என் பாவங்களை மன்னிக்கிறவராகி, பாவத்துக்கு எதிராக நான் நிற்க உதவும்படி என் இருதயத்தில் வாசம் செய்கிறார். பாவத்தைக் குறித்தச் சரியான உணர்வினை எனக்கு தந்து, என்னை பலப்படுத்தி, சோதனைகளை எதிர்க்க உதவுகிறார். பாவத்துக்கு எதிராக அவர் கொண்டிருக்கிற வெறுப்பை எனக்குள் வைக்கிறார், எனினும் நான் விழுந்து போகும்போது என்னை மன்னித்து திரும்பவும் நிலை நிறுத்துகிறார். பாவத்துக்கு எதிரான பலத்த அரணை அவர் தம் வார்த்தையைக் கொண்டு கட்டி எழுப்புகிறார். சோதனைகளுக்கு எதிரான அம்புகளாக அவ்ருடைய வார்த்தையைப் பயன்படுத்தும்படிக்கு அவைகளை என் நினைவில் பதிக்கிறார். என் இருதயத்தை பரிசுத்தமான மற்றும் முழுவதும் அவ்ருக்குச் சொந்தமான ஒரு கோட்டையாக மாற்றுகிறார். அந்தக் கோட்டையில் மையப் பகுதியாக ஜெயம்பெற்றவரின் மகத்துவத்தை துதிக்கும் ஊற்று இருக்கிறது. என் இருதயம் பரிசுத்த ஆவியானவரை அஸ்திபாரமாகக் கொண்டிருக்கிறது, அதிலிருந்து அவர் என் வார்த்தைகள் மற்றும் செயல்களை வழிநடத்த முடியும். இந்தக் கோட்டையின் வாசலின் வழியாக வருபவர்கள் இயேசுவை சந்திப்பார்கள்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னுள் வாரும், என் உள்ளத்தில் வாரும், இயேசுவே எனக்குள் வாரும். இன்று வாரும், வந்து தங்கும், என் உள்ளத்தில் வாரும் இயேசுவே என்று ஒரு குழந்தையாகப் பாட கற்றுக் கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment