Wednesday, February 29, 2012

SOAP 4 Today - அதிகப்படியான.......

Scripture வேதவசனம்: யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

Observation கவனித்தல்: 366 நாட்களைக் கொண்ட இந்த லீப் வருடத்தில் இன்றைய நாள் அதிகப்படியானது ஆகும். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் உண்டு, இந்த லீப் வருடத்தில் 29 நாட்கள். இது இவ்வுலகில் நான் அனுபவிக்கும்படி தேவன் எனக்குத்தந்த அதிகப்படியான ஆசீர்வாதங்களைக் குறித்து யோசிக்கவைக்கிறது. நான் சிறு பையனாக இருந்த போது வைத்திருந்த ஒரு சிறிய வண்ண கிரையான் பென்சில் பாக்ஸ் ஐ நினைவுகூறுகிறேன். அதில் சிகப்பு, ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு என அடிப்படையான 8 கலரில் பென்சில்கள் இருந்தன. அவை மிகவும் அழகாக இருந்தன. நான் அதைக் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்நாட்களில் 16 கலர் உள்ள பென்சில் பாக்ஸையும், அதன் பின்பு 32 கலர் உள்ள பென்சில் பாக்ஸ் ஐயும் பெற்றேன். அவற்றில் பச்சை வண்ணத்தில் ஒன்றுக்கு மேல் காணப்பட்டன, கரும்பச்சை, இளம் பச்சை என அதில் இருந்தது. அடிப்படைக் வர்ணங்கள் கலவையாகவும் இளம் வண்ணத்திலும் காணப்பட்டன.

எட்டு அடிப்படையான வர்ணங்களில் தேவன் இவ்வுலகத்தை உண்டாக்கியிருக்கக் கூடும் என்றாலும், அவை அழகை விரும்பும் தேவனின் அற்புதமான பலவகை வர்ணத்தை வெளிப்படுத்தி இருக்காது.

Application பயன்பாடு: இன்று தேவன் எனக்குத் தந்த அதிகப்படியான ஆசீர்வாதங்களை கவனித்து நான் அவருக்கு நன்றி சொல்லும் ஒரு நாள் ஆகும். அவைகள் இல்லாமலேயே கூட நான் வாழ்ந்திருக்க முடியும் என்றாலும் கூட, நான் பெற்று மகிழும்படியாக தேவன் எனக்கு அவைகளைத் தந்திருக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் பெற்று அனுபவிக்கும்படி இவ்வுலகில் நீர் வைத்திருக்கிற பலவிதமான வர்ணங்களுக்காக, உணவுகளுக்காக, ஓசைகளுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் உண்மையிலேயே ஆச்சரியமானவர். ஆமென்.

No comments:

Post a Comment