Scripture வேதவசனம்: ரூத் 2:8 So அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே
வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப்
பெண்களோடு கூடவே இரு.
ரூத் 4:13 போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
ரூத் 4:13 போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
Observation கவனித்தல்: ரூத் மோவாபிய தேசத்தில் பிறந்தாள். தன் கனவணின் மரணத்திற்குப் பின், தன் மாமியாகிய நகோமியுடன் இஸ்ரவேலுக்குத் திரும்பினாள். நகோமியைத் தவிர அவளுக்கு வேறு உறவோ, இஸ்ரவேலிய பாரம்பரியமோ, அக்கலாச்சாரத்தைக் குறித்த அறிவோ இல்லை. ஆகவே அவள் நகோமியின் வார்த்தைகளை கவனமாக பின்பற்றினாள். அவள் வயள்வெளிக்கு அனுப்பப்பட்ட போது வேலையாட்களுடன் தனக்கு இடத்தைத் தெரிவு செய்தாள். ஆயினும் பின்னர் அவள் அதன் உரிமையாளராக ஆனார். அவள் தாவீதின் கொள்ளுப் பாட்டியாகவும் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றிலும் கூட இடம் பெற்றாள். அனேக வேத பகுதிகளைப் போல, இங்கேயும் ஊழியக்காரர்களுக்கு ராஜ்ஜியத்தில் இடம் கிடைக்கிறதைக் காண்கிறோம்.
Application பயன்பாடு: ரூத்துக்கு, ஒரு ஊழியக்காரியாக அவள் இருந்ததில் இருந்து அது துவங்கியது. நான் மகிழ்ச்சியுடன் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாக இருக்க முடியுமானால், தேவன் தெரிந்து கொள்ளும் இடத்தில் அவர் என்னை பயன்படுத்த முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மை சேவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது என் பாக்கியம். ஆமென்.
No comments:
Post a Comment