Scripture வேதவசனம்: சங்கீதம் 20:1. ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
2. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
3. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

Observation கவனித்தல்: நான் வாசிக்கும் வேதாகம விளக்க நூல்கள் இந்த சங்கீதம் எழுதப்பட்ட சூழ்நிலையை திட்டமாகக் கூறவில்லை. ஒரு படையை யுத்தத்திற்கு அனுப்பும்போது சொல்லப்பட்ட சங்கீதமாக அவை கருதுகின்றன. எனக்கு இச்சங்கீதமானது தாவீதுக்கு நெருங்கிய நண்பனான யோனத்தான் சவுல் ராஜா அவனுக்கு எதிராக செய்ய நினைக்கும் தீமைகளையும், அவனைக் கொல்ல நினைப்பதையும் சொல்லியபின்பு பாடிய சங்கீதம் என்று கருதுகிறேன். (1 நாளாகமம் 20).
Application பயன்பாடு: என் மகனோ அல்லது எனக்கு நெருங்கிய நண்பர்களோ என்னை விட்டு பிரிந்திருக்க நேரும்போது இவ்வசனங்கள் எனக்கு மிகவும் ஆசீர்வாதமானவைகளாக இருக்கின்றன.
என் மரணம் என்னை நெருங்கி வருகிறதை அறிந்து கொள்ளும் வசதியை நான் உடையவனாக இருக்கையில், இவ்வசனங்களை என் சொந்த வார்த்தைகளில் எனக்குப் பின் வாழப் போகிறவர்களிடம் சொல்வது ஆசீர்வாதமானதாயிருக்கும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி உம்மிடத்தில் வேண்டிக்கொள்வது உம் சித்தத்திற்கு முரணானது அல்ல. உம் ஜனங்களை ஆசீர்வதிப்பது உமக்கு மகிழ்ச்சியானது ஆகும். ஆமென்.
No comments:
Post a Comment