Monday, May 7, 2012

SOAP 4 Today = பிரச்சாரம் செய்தல்


Scripture வேதவசனம்:    2சாமுவேல் 15:1 இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
 2. மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
3. அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
4. பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
5. எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.
6. இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
 
Observation கவனித்தல்:  நாம் தேர்தல்களில் அரசியல் கட்சிப் பிரச்சாரங்களை அதிகமாக காண்கிறோம். வேட்பாளர்கள் ஓட்டுகளுக்காக அலைகிறார்கள். சிலர் அப்சலோமைப் போலவே செயல்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. இஸ்ரவேலில் ராஜாவுக்காக தேர்தல் எதுவும் நடைபெறாத போதும், அப்சலோமின் செயல் ராஜாவாகிய தாவீதின் நிலையை கேலி செய்வதாக இருந்தது. 

Application பயன்பாடு:   நான் என் பக்கமாக ஜனங்களின் கவனத்தைத் திருப்பாமல், உண்மையான ராஜாவாகிய இயேசு ராஜாவின் பக்கம் ஜனங்களின் கவனத்தைத் திருப்ப கனமுள்ளவனாக இருக்க வேண்டும்.
 
Prayer ஜெபம் கர்த்தாவே, நீர் அனைத்து கனத்துக்கும் பாத்திரராக இருக்கிறீர். உமக்கெ எல்லா மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

No comments:

Post a Comment