Monday, June 11, 2012

SOAP 4 Today - மகிழ்ச்சி & கனி

Joy and Fruit
Scripture வேத்வசனம்:  பிலிப்பியர் 1:12 சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13. அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
14. சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
 
Observation கவனித்தல்: பவுலின் கூற்றின்படி, சிறைச்சாலையில் போடப்பட்டவர்கள் அனைவரும் பொல்லாதவர்கள் அல்ல, பவுலும் பொல்லாதவர் அல்ல , கிறிஸ்துவினிமித்தம் அவர் கட்டுண்டவராக இருந்தார் என அறிந்து கொண்டனர்.  ரோமின் சிறைச்சாலைக் கைதியாக இருந்ததில் பல அனுகூலங்கள் இருந்தன. முதலாவதாக, கர்த்தர் பவுலுக்கு முன்பே காட்டியவண்ணமாக, பவுலின் ஊழியத்திற்கான பயணத்தை ரோம அரசாங்கம் ஒழுங்கு செய்தது. இரண்டாவது, பவுல் தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவருடன்  காவலர்கள் இருந்தபடியினால், பவுல் பேசுவதைக் கேட்பதற்கான ஆட்கள் பவுலுடன் எப்போதும் இருந்தனர். மூன்றாவதாக, பவுல் சிறைச்சாலையில் இருக்கும்போது சபைகளுக்கு நிருபங்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. 
        ஊழியம் செய்வதற்குக் கிடைத்த எந்த வாய்ப்பையும் பவுல் தவறவிடவில்லை.  சிறைக்கைதியாக இருந்த போது பவுல் தன் சுதந்திரத்தை இழந்தாரா? அவருடைய நிருபங்களை வாசிக்கும்போது அவர் அவ்வாறு எங்கும் குறிப்பிடவில்லை. சுயபரிதாபத்திற்குள் இருப்பதற்குப் பதிலாக ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகள் அனேகம் அவருக்குக் கிடைத்தது.

Application பயன்பாடு:     நான் சபையின் மூத்த போதகராக இருப்பதை இழந்ததைக் குறித்து மக்கள் என்னிடம் கேட்கும்போது நான் எதையும் இழக்க வில்லை என்றே கூறுகிறேன். நான் முன்பு வாரம் ஒன்று அல்லது இரு பிரசங்கங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன். இப்போது அனுதினமும் ஒரு சிறு செய்தியை தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன்.  என் ஊழியம் சுருங்கிவிட்டதாக நான் கருதவில்லை, மாறாக அது விரிவடைந்திருப்பதாகவே கருதுகிறேன். குறிப்பிட்ட நாட்களில் மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து செய்வது மாத்திரம் சபையின் ஊழியம் அல்ல என்பதை நான் இப்போது சிறப்பாக அறிந்திருக்கிறேன். சபை மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களில், வேலைகளில் இருக்கும்போது அவர்களுக்கு ஊழியம் செய்வதே   சபையின் ஊழியம். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உமக்கு ஊழியம் செய்வதில் சிறப்பாக விளங்க உதவும்.  நான் உமக்குச் செய்யும் ஊழியம் உமக்கு மகிழ்ச்சியையும் உம் ராஜ்ஜியத்திற்கு கனியையும் சேர்க்க உதவும், ஆமென். 

No comments:

Post a Comment