Friday, July 27, 2012

SOAP 4 Today - பாதுகாப்பு, இரட்சிப்பு

Scripture வேதவசனம்: 2 பேதுரு 2: 5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
7. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;
8. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

Observation கவனித்தல்: கர்த்தர் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வித்தியாசத்தை அறிந்திருக்கிறார். அக்கிரமக்காரர் மீது நியாயத்தீர்ப்பைச் செலுத்தும் போது, தேவன் நோவாவைக் காத்தி, லோத்துவை இரட்சித்தார்.

Application பயன்பாடு: என்னைச் சுற்றிலும் தீமைகள் எழும்புவதை நான் பார்க்கும்போது, தேவன் என்னை பாதுகாக்க வல்லவர் என்பதில் நம்பிக்கையாயிருக்க முடியும். நான் பயத்தில் நடக்காமல், விசுவாசித்து நடக்கிறேன். பிரச்சனை வருவதை நான் காணும்போது, என் மனதை பய சிந்தனைகள் மேற்கொள்ள அனுமதிப்பதற்குப் பதிலாக, தேவனின் வாக்குத்தத்தங்களை நான் நினைவுபடுத்து அவர் கரத்தின் இரட்சிப்பை எதிர்நோக்கி இருக்க முடியும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை பாதுகாத்து இரட்சிப்பீர் என்று நம்புகிறேன். மற்றவர்களில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment