Tuesday, October 2, 2012

SOAP 4 Today - மாசற்ற இயேசு

Scripture வேதவசனம்: லூக்கா 15: 1சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
 
Observation கவனித்தல்:   சுத்தமாக கறைபடாமல் இருக்கிற ஒரு பொருளுடன் கறைபடித்தப்பட்ட அழுக்கான பொருள் கலக்கும்போது, சுத்தமாக இருப்பதை கறை மாசுபடுத்திவிடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த வசனத்தில், பாவமில்லாத பரிசுத்தர் வேண்டுமென்றே பாவிகளுடன் கலந்து காணப்படுவதைக் காண்கிறோம். இயேசு குஷ்டரோகிகள் அருகில் சென்று அவர்களைத் தொடவும் செய்தார்.  அவரை குஷ்டரோகம் பிடிக்கவில்லை, மாறாக குஷ்டரோகிகள் சொஸ்தமாயினர் (லூக்கா 5&17).  இயேசு கெட்டுப் போகவில்லை, ஆனால் பாவிகள் மன்னிக்கப்பட்டனர், குஷ்டரோகிகள் சுத்தமாயினர்.
 
Application பயன்பாடு: நான் என் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவை என் வாழ்க்கைக்குள் வர அழைக்கும்போது, அவருடைய அன்பினால் நான் மன்னிக்கப்பட்டு,   அவருடைய தியாகபலியினால் நான் நீதிமானாக்கப்படுகிறேன். நான் பாவமே செய்யாதவன் போல என்ன மாற்றிவிடுகிறார். எவ்வளவு ஆச்சரியம்!
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் பாவிகளுடன் கலந்து இருக்க விருப்பமுடையவராக இருப்பதற்காக மகிழ்கிறேன்.  நீர் பாவத்தை வெறுத்தாலும், அதைக் குறித்து பயப்படுவதில்லை. உம் நீதி பாவத்தைக் காட்டிலும் மாபெரிது. உம் மரணம் என் பாவங்களுக்கான பரிகாரத்தைச் செலுத்தியது.  நீர் தரும் ஜீவன் உம் பிள்ளையாக வாழ்வதற்கு என்னை உயர்த்துகிறது. ஆமென்.

No comments:

Post a Comment