Sunday, October 7, 2012

SOAP 4 Today - நிமிர்ந்து (அண்ணாந்து) பார்த்து, தலைகளை உயர்த்துங்கள்

Scripture வேதவசனம்: லூக்க 21: 25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
 
Observation கவனித்தல்: கடைசி நாட்களில் காணப்படப் போகும் கொடிய அடையாளங்களைக் குறித்து இயேசு பேசினார். வானங்களிலும் பூமியிலும் அடையாளங்கள் காணப்படும். பூமியிலுள்ள ஜனங்கள் வேதனையினாலும், எதிர்காலத்தைக் குறித்த பயத்தினாலும் இருக்கும்போது, அவர்கள் அவருடைய வருகையை எதிர்நோக்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 
 
Application பயன்பாடு: வழக்கத்தைக் காட்டிலும் அதிக உபத்திரவங்கள் காணப்படும் நேரங்கள் உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் நான் நிமிர்ந்து மேலே பார்க்க வேண்டும். அவருடைய சமூகத்தை நான் எதிர்நோக்கிக் காத்திருக்கவேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, பாடுகளின் சமயத்தின் நான் உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன். நான் உம்மை தேடும்போது உம்மைக் கண்டு கொள்கிறேன்,. ஆமென்.

No comments:

Post a Comment