Scripture வேதவசனம்: கலாத்தியர் 2:1. பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
Observation கவனித்தல்: பவுல் கிறிஸ்தவனான பின்பு மூன்றுவருடங்கள் கழிந்த பின்னரே முதல் முறை எருசலேம் சென்றார்( கலாத்தியர்.1:18 ஐ கவனிக்க) இப்போது 14 வருடங்கள் கழித்து இரண்டாவது முறை எருசலேமிற்குச் செல்கிறார். நாம் குறிப்பிட்ட சில காரியங்களைக் கவனிக்காவிடில், பவுல் மனமாற்றம் அடைந்த உடனே அந்தியோகியாவிற்குச் சென்று பிரசங்கம் செய்யவும், பின்பு மிஷனெறி பயணங்களை மேற்கொண்டார் எனவும் நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். இங்கே நாம் 14 ஆண்டுகள் இடைவெளியைக் குறித்து வாசிக்கிறோம்.
Application பயன்பாடு: தேவன் தம் வேளையிலேயே செயல்படுகிறார். அவர் அவசரப்படுகிறதில்லை. விசுவாசத்தையும் பொறுமையையும் உடையவனாக இருப்பதற்கு இது எனக்கு மிகவும் முக்கியமானது ஆகும். நான் காத்திருப்பதற்குத் தகுதியான ஒரு திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார் என்ற விசுவாசம் எனக்குத் தேவை. அவருடைய வேளை வரும்வரை காத்திருப்பதற்கு எனக்கு பொறுமை தேவை. அவர் என்னில் கிரியை செய்ய நான் அனுமதித்தால், அவருக்கேற்ற வேளையில் நான் ஆயத்தமாக இருப்பேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் திட்டத்தையும், அதற்கான உம் வேளையையும் நான் நம்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment