Wednesday, December 12, 2012

SOAP 4 Today - சேவை செய்வதின் பலன்கள்

Scripture வேதவசனம்:   Hebrews 6:10  ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

Observation கவனித்தல்:  முதலாவதாக, ஒவ்வொருவரும் செய்வதற்குத் தக்க பலனைத் தருவதற்கு தேவன் நீதியுள்ளவர். இரண்டாவது: தேவன் அவைகளை நினைவு கூர்கிறார், அவருடைய நினைவுதிறன் பரிபூரணமானது.  மூன்றாவதாக, நீங்கள் தேவஜனங்களுக்குச் செய்கிறதை அவருக்கே செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார். தேவனுக்கும், தேவ ஜனங்களுக்கும் சேவை செய்பவர்களுக்கு தேவன் சிறப்பான பலன்களைத் தருகிறார்.
 
Application பயன்பாடு: நான் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, நான் அதை தேவனுக்கே செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் தேவன் அதை அவருக்கே செய்யப்பட்டதாக எடுத்துக் கொண்டு அவர் பலனளிக்கிறார்.  நான் சேவிக்கும் மனிதர்கள் மறந்து, அதற்குதக்க பலனைத் தராமல் போகலாம். ஆனால் அவர் ஒருபோதும் மறப்பதில்லை, எப்பொழுதும் என் செய்கைக்குத் தக்க பலனைத் தர வல்லவராக  இருக்கிறார். 
   
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம்மையும் உம் ஜனங்களையும் சேவிப்பது எனக்கு எவ்வளவு பாக்கியமானது! ஆமென்.

No comments:

Post a Comment