Friday, December 14, 2012

SOAP 4 Today - கஷ்டங்கள்

Scripture வேதவசனம்: எபிரேயர்    12: 7  நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

Observation கவனித்தல்: எல்லா கஷ்டங்களும் சிட்சை அல்ல. சிலவேளைகளில் நாம் செய்தவைகளின் பலனாக நாம் கஷ்டங்களினூடாக கடந்து செல்கிறோம். ஆனால் எல்லா கஷ்டங்களையும் நம்மால் சகித்துக் கொள்ள முடியும். ஏனெனில் அந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கிறது. மேலும் நம் பரம பிதாவும் நம் நன்மைக்காக அவைகளின் மூலமாக கிரியை செய்கிறார்.
 
Application பயன்பாடு: கஷ்டமான தருணங்கள் நான் மிகவும் மகிழ்கிற தருணமல்ல, ஆணால் அவைகளை தேவன் என் நன்மைக்காக மாற்றுவார் என்பதற்காக நான் அவைகளைக் குறித்து மகிழ்ச்சியடையலாம். 
 
Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே,  அனைத்தும் நன்மைக்காகவே நடக்கிறது என்பதை எனக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும் (ரோமர்.8:28). கடினமான தருணங்களினூடாகக் கடந்து செல்லும்போது நல்ல மனப்பான்மையைக் காத்துக் கொள்ள்கிறவனாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment