Scripture வேதவசனம்: யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள்
விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே
என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
யோவான் 10:
32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை
உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல்
கல்லெறிகிறீர்கள் என்றார்.
யோவான் 10: 37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
யோவான் 10: 37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
Observation கவனித்தல்: இந்த அதிகாரத்தில் மூன்றுமுறையும், அதைத் தொடர்ந்து வரும் அதிகாரங்களில் அனேக முறை இயேசு கிறிஸ்து தன் கிரியைகளை தம் வார்த்தைகளுக்கு நிரூபணமாக சுட்டிக்காட்டுகிறார். ஜனங்கள் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆகவே இயேசு தம் கிரியைகளைச் சுட்டிக் காட்டினார். அவருடையை கிரியைகள் அவர் யார் என்பதை நிரூபித்துக் காட்டின.
Application பயன்பாடு: நான் கிரியைகளால் இரட்சிக்கப்பட வில்லை, அவருடைய கிரியைகளை மீது வைக்கும் விசுவாசத்தினாலேயே இரட்சிக்கப்பட்டேன். ஆயினும் அந்த விசுவாசமானது நான் கிரியைகளை நடப்பிக்குமளவுக்கு உறுதியாக இல்லை எனில், அது என்னைக் காப்பாற்ற பலனற்றதே. நான் தேவனுடைய பிள்ளை என்பதை நம்புவதில் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. என் வாழ்க்கை, அதாவது நான் செய்வதும் சொல்வதும் மற்றவர்களை நம்பச் செய்வதாக இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் இன்று நடப்பிக்கும் கிரியைகள் நீர் என் வாழ்வில் இருக்கிறீர் என்பதற்கான ஆதாரமாக இருக்கும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment