Thursday, December 27, 2012

SOAP 4 Today - அவர் அறிந்திருக்கிறார்

Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 2: 2. உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
3. நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். வசனங்கள்2:9, 13, 19, 3:1, 8, 15

Observation கவனித்தல்:  ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்குமான செய்தியை இயேசு யோவானிடம் கொடுக்கிறார்.  ஒவ்வொரு செய்தியும் நான் அறிந்திருக்கிறேன், எனக்குச் சொல்லப்பட்டது போன்ற ஆரம்ப வரிகளுடன் வருகிறது. நாம் இயேசுவுக்கு முன்பாக நிற்கும்போது, அவர் அறிந்திருக்கிறார் என்பதில் நாம் நிச்சயமுடையவர்களாக  இருக்கலாம்.
 
Application பயன்பாடு: அவர் என்னை அறிந்திருக்கிறார். அவர் என் போராட்டங்களைப் புரிந்து கொள்கிறார். நான் கடந்து செல்லும் பாதையை அவர் அறிந்திருக்கிறார். நான் அவரை ஏமாற்ற முடியாது. என்னைச் சுற்றிலும் இருப்ப்பவர்களைக் குறித்தும் அவர் அறிந்திருக்கிறார்.  அவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள், எப்படி என்னை நடத்துகிறார்கள் என்பதையும் அவர் அறிந்திறார்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  உமக்கு முன்பாக எதுவும் மறைவானதில்லையாதலால் நான் உம்மை நம்பமுடியும். ஆமென்.

No comments:

Post a Comment