Scripture வேதவசனம்: கொலோசேயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய
ராஜ்யத்திற்கு பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
Observation கவனித்தல்: என்னை அழிப்பதற்கு முயற்சிக்கும் எதிரியின் அதிகாரத்தில் இருந்து என்னை இந்த உலகத்தை நேசிக்கும் தேவன் (யோவான்.3:16) காப்பாற்றினார்.
சாத்தானுடைய இராஜ்ஜியத்திலிருந்து விடுவிப்பதில், நான் என் சுயத்தின் படி வாழ தேவன் என்னை விடவில்லை. அவர் என்னை தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
Application பயன்பாடு: இப்போது இயேசு என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருக்கிறார். சுயாதீனம் என்பது நான் என் விருப்பப்படி செயல்படுவது என்று நான் நினைத்த காலங்கள் உண்டு. நான் எந்த இராஜ்ஜியத்தில் வாழ வேண்டும் என்பதை தெரிவு செய்வதே அந்த சுயாதீனம் என்பதை நான் இப்போது அறிந்து கொள்கிறேன். நான் ஒரு இராஜ்ஜியத்தைத் தெரிவு செய்யும்போது அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது உண்மைதான். நான் தேவனுடைய இராஜ்ஜியத்தை தெரிவு செய்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் இராஜ்ஜியத்தில் வாழவும், அதன் பரிபூரணத்தை அனுபவிக்கவும், உம் அதிகாரத்திற்கு விருப்பத்துடன் கீழ்ப்படியவும் எனக்கு கற்றுத்தாரும். ஆமென்.
No comments:
Post a Comment