Sunday, December 9, 2012

SOAP 4 Today - நடைமுறையில் செயல்படுத்துதல்

Scripture வேதவசனம்:   1தீமோத்தேயு 5:4  விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.
Observationகவனித்தல்: இந்த வசனம் தேவனைப் பிரியப்படுத்துவதற்கான வழியை நமக்குத் தருகிறது.  இன்று என் கவனத்தைக் கவர்ந்த விசயம் என்ன வெனில் விசுவாசிகள் தங்கள் வயதான பெற்றோரைப் பராமரித்தல் ஆகும், அது அவர்கள் தங்கள் பக்தியை நடைமுறையில்  செயல்படுத்துவது ஆகும். உங்கள் செயல்களைப் பாதிக்காத பக்தியினால் ஒரு பிரயோஜனுமும் இல்லை. நம் பக்தியினால் பயன்பெறுபவர்கள் முதலாவது நம் வீட்டாரே.
 
Application பயன்பாடு: நாம் நம் பெற்றோரை முறையாகக் கவனிக்கும் போது, நம் பக்தியானது முறையானதாக இருக்கிறது. நாம் தேவனைப் பிரியப்படுத்துகிறோம் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.
 
Prayer ஜெபம்:   கர்த்தாவே எங்கள் வீட்டில் உள்ள முதியவர்களைப் பராமரிப்பதற்கான ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
 

No comments:

Post a Comment