Sunday, January 20, 2013

அனைத்திலும்

ஜனவரி 20:  ஆதியாகமம் 49-50; சங்கீதம் 8; லூக்கா 20
 
Scripture வேதவசனம்:  சங்கீதம்ட் 8:1  எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

Observation கவனித்தல்:   தாவீது இந்த சங்கீதத்தை ஆரம்பித்தது போலவே நிறைவு செய்கிறார். இந்த இரு வசனங்களுக்கிடையே அவர் வானத்தையும் பூமியையும் பற்றிப் பேசுகிறார்.  தேவனுடைய பூமியின் மீது அதிகாரத்தைப் பெற்றிருக்கிற மனிதனைப் பற்றி அவர் பேசுகிறார். மனிதன் பார்க்கிற எல்லா இடங்களிலும் அவன் தேவனுடைய கைகளின் கிரியைகளைக் காண்கிறான்.
 
Application பயன்பாடு: இன்று நான் பார்க்கிற அனைத்தும் தேவனால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது தேவன் உண்டாக்கியதைப் பயன்படுத்தி, தேவன் உண்டாக்கிய மனிதன் உண்டாக்கியதாகவோ இருக்கிறது.   என் கண்களால் நான் பார்க்கும்போது, தேவனுடைய கைவேலைப்பாட்டைக் காணாமல் இருப்பது இயலாத காரியம்.  நான் பார்க்கிற தீமையிலும் கூட தேவன் உண்டாக்கியதை தவறாகப் பயன்படுத்துவதையோ அல்லது தேவ சாயலால் உண்டாக்கப்பட்ட எவராகிலும் ஒருவரால் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ மாத்திரமே காண்கிறேன்.
 
Prayer ஜெபம்:  ஓ, கர்த்தாவே,   உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது. நான் பார்க்கிற ஒவ்வொன்றும் உம் கரங்களின் கிரியைகளை வெளிப்படுத்துகிறது என்பதை நினைவு கூர உதவும். ஆமென்.

No comments:

Post a Comment