ஜனவரி 27: யாத்திராகமம் 17-20; அப்போஸ்தலர் 3
Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 3:14 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
15. ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
15. ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
19. ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள்
வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில்
அனுப்பும்படிக்கும்,
20. உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
20. உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
Observation கவனித்தல்: அப்போஸ்தல நடபடிகளின் ஆசிரியரான லூக்கா இங்கு பேதுருவின் பிரசங்கத்தை பதிவு செய்கிறார். இயேசுவே பரிசுத்தமும் நீதியுமுள்ளவர் என்றும் அவரே ஜீவாதிபதி என்றும் பேதுரு சொன்னார். இந்தக் கருத்து அப்போஸ்தலனாகிய யோவான் (யோஆன்.1:9-14) மற்றும் பவுல் (கொலோசேயர்.1:15-20) ஆகியோரின் கருத்துக்கு உடன்பட்டதாக இருக்கிறது. இயேசுவே ஜீவாதிபதி. மரணம் முடிவு அல்ல என்ற முழு விசுவாசத்தில் அவர் தன்னை கொலைசெய்யப்படுவதற்கு ஒப்புக் கொடுத்தார். அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்ட பின்பு மறுபடியும் உயிர்த்தெழுவேன் என தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார்.
Application பயன்பாடு: எனக்கும் அதே நிச்சயம் உண்டு. மரணத்தின் வாசல் மூலமாக ஜீவாதிபதி வழியை உண்டாக்கியிருக்கிறார். பூமியில் என் சரீரத்தில் இருப்பதற்கு மட்டுமே மரணம் ஒரு முடிவாக இருக்கிறது.
ஆகவே நான் ஆயத்தமாக இருக்கும்படி மனம் திரும்பி, அவருடைய மன்னிப்பைப் பெற்று, அவரை ஆண்டவராக என் வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டும்,
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் ஜீவாதிபதியாகவும் சர்வத்தையும் சிருஷ்டித்தவராகவும் இருக்கிறீர். நீர் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி அறிந்திருக்கிறீர். ஏனெனில் இந்த உலகம் உம்மாலே படைக்கப்பட்டது மாத்திரமல்லாமல், நீர் இங்கே வாழ்ந்தும் இருக்கிறீர். நான் உம் மன்னிப்பையும், உம் வழிநடத்துதலையும் நம்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment