Tuesday, January 15, 2013

SOAP 4 Today - காணக் கூடிய ஆசீர்வாதங்கள்

ஜனவரி 16:  ஆதியாகமம் 39-41; Luke 16
 
Scripture வேதவசனம்:  ஆதியாகமம் 39: 1யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
3. கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:
4. யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

Observation கவனித்தல்:  யோசேப்பு தன் சகோதரரால் அடிமையாக விற்கப்பட்டிருந்தான். தேவனின் பிரசன்னம் யோசேப்புக்கு நிச்சயம் ஆறுதலாக இருந்தது.   கடினமான தருணங்களில் நமக்கு என்ன நடக்கிறது என்பதை தேவன் அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்வதே சில வேளைகளில் நமக்கு உதவுகிறது.  ஆனால் ஆண்டவரின் பிரசன்னம் அவனுடைய இருதயத்தில் உணர்வை மாத்திரம் அல்ல, மற்றவர்களும் காணக்கூடிய விதத்தில் அது இருந்தது. யோசேப்புக்கு தேவ அங்கிகாரம் மற்றும் ஆசீர்வாதம் இருக்கிறது என போத்திபாரால் காண முடிந்தது.     
 
Application பயன்பாடு: என் வாழ்வில் உள்ள தேவ பிரசன்னத்துக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். அவர் எனக்கு சமாதானத்தைத் தருகிறார். தேவன் எனக்குத் தருகிற ஆசீர்வாதங்கள் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் விரும்புகிறார். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, மற்றவர்கள் என் வாழ்வில் உள்ள உம் ஆசீர்வாதங்களைக் காணவும், அவர்களும் அதனால் பயனடையவும் செய்யும்படி உதவும். ஆமென்.

No comments:

Post a Comment