ஜனவரி 4: ஆதியாகமம் 9-11; லூக்கா 4
Scripture வேதவசனம்: ஆதியாகமம் 9:6 “தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார். எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.
Observation கவனித்தல்:
மனிதனின் பாவத்தினால் தேவன் மிகவும் விசனப்பட்டு, நோவாவின் குடும்த்தினரைத் தவிர மற்ற அனைவரையுல் அப்பொழுதுதான் அழித்திருந்தார். ஆயினும் தேவன் தம் சாயலின் உண்டாக்கப்பட்டவன் என்பதை அவர் மறக்கவில்லை. பாவமானது அந்த தேவ சாயலை மிகவும் பாதித்தது. ஆகவே பாவம் தொடர்ந்து மேற்கொள்ளாதபடிக்கு தேவன் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. இருந்த போதிலும் மனிதனுக்குள் இருந்த தன் சாயலை தேவன் அறிந்திருந்தார்.தேவ சாயலின் உண்டாக்கப்பட்ட மனிதன் மீது மரண தண்டனை இணைக்கப்பட்டது. இது இருவிதங்களில் பொருந்துகிறது. முதலாவது, ஒரு மனிதன் கொல்லப்படும் வேளைகளில் எல்லாம், அது தேவனுக்கு எதிரானதும் தேவ சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதனுக்கு எதிரானதுமான பாவம் ஆகும். இரண்டாவதாக, மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற படியால், மனிதனுக்கு நியாயந்தீர்க்கிறதற்கான திறமையும் பொறுப்பும் இருக்கிறது.
Application பயன்பாடு: என்னைச் சுற்றிலும் இருக்கிற ஒவ்வொருவரும் தேவ சாயலை உடையவர்கள். ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்துவதன் மூலம் நான் தேவனை கனப்படுத்துகிறேன். நான் அவர்களை எப்படி நடத்துகிறேன், அவர்களிடம் நான் எப்படிப் பேசுகிறேன் மற்றும் அவர்களைக் குறித்து எப்படிப் பேசுகிறேன் போன்ற காரியங்கள் நம் சிருஷ்டிகரான தேவன் மீது நான் எந்தளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் மீது கொண்டிருக்கிற மரியாதையனது, உம் சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறவர்களிடத்தில் நான் காட்டும் மரியாதையில் வெளிப்படுவதாக. ஆமென்.
No comments:
Post a Comment