ஜனவரி 6: ஆதியாகமம் 15-17; லூக்கா 6
Scripture வேதவசனம்: லூக்கா 6: 47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.

Observation கவனித்தல்: மூன்று வார்த்தைகள் என் கவனைத்தை ஈர்க்கின்றன. முதலாவது வார்த்தை பெருவெள்ளம் ஆகும். எல்லாருடைய
வாழ்விலும் பெருவெள்ளம் (புயல்கள்) வருகின்றது. அவைகளை நாம் தடுக்க முடியாது. அவைகளுக்காக நாம் ஆயத்தமாக இருக்க மட்டுமே இயலும். இரண்டாவது வார்த்தை வீடு என்பது ஆகும். ஒரு அஸ்திபாரத்தின் மீது வாழ்க்கை வைக்கப்படுவதில்லை. அவை கட்டி எழுப்பப்படவேண்டும். அதில் தொடர்தேர்ச்சியான ஒரு செயல்முறை இருக்கிறது. ஒரே இரவில் அது நடைபெறுவதில்லை. மூன்றாவது வார்த்தை அஸ்திபாரம் என்பது ஆகும். ஒருவர் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதற்கான அனேக அஸ்திபாரங்கள் உண்டு. ஆனால் ஒன்றே ஒன்றுதால் பெருவெள்ளத்தைத் தாங்கும் சக்தி உள்ளது. தேவனுடைய வார்த்தை மட்டுமே அந்த ஒரே உறுதியான அஸ்திபாரம். ஏனெனில் தேவனின் குணாதிசயம் நம்பத்தக்கதும் உண்மையானதும் ஆகும்.
Application பயன்பாடு: நான் என் வாழ்க்கையை ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு செயலாக, ஒவ்வொரு தெரிந்தெடுப்பகளாகக் கொண்டு கட்டுகிறேன். நான் தேவனுடைய வார்த்தையின் மீது கட்டுகிறேன். தேவன் எனக்கு அற்புதமான அஸ்திபாரத்தைத் தந்திருக்கிறார். இதுவரைக் கட்டப்பட்டதிலேயே சிறந்த அந்த வீட்டிற்கு அது பொருத்தமானதாக இருக்கிறது. அந்த சிறந்த அஸ்திபாரத்தில் நான் மோசமான ஒரு வீட்டைக் கட்ட விரும்பவில்லை.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் வார்த்தையே என் வாழ்க்கையின் அஸ்திபாரமாக இருக்கிறது. நான் உம் வார்த்தையை நம்பமுடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் உம் வார்த்தையானது உம் குணாதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆமென்.
No comments:
Post a Comment