பிப்ரவரி 8: லேவியராகமம் 7-9; அப்போஸ்தலர் 15
Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 15:29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது;
Observation கவனித்தல்: ஆதிச் சபையின் தலைவர்கள் சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சவாலான நிலையில் இருந்தனர். யூதரல்லாதவர்கள் சபையில் அங்கமாகும்படியாக யூதப் பாரம்பரியத்தை பின்பற்றுகிறவனாக மாற வேண்டுமா? தேவன் செய்கிற செயல்களைப் பற்றியவைகளைக் கேட்பதற்காக தலைவர்கள் கூடினர். பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைச் சார்ந்து ஒரு தீர்மானம் எடுத்தனர்.
Application பயன்பாடு: தேவனுடைய வார்த்தையில் தெளிவாகக் குறிப்பிடப்படாதவைகளில் நான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய தருணங்கள் இருக்கின்றன.நான் எடுக்கிற ஒவ்வொரு கடினமான தீர்மானத்திலும், “பரிசுத்த ஆவியானவருக்கும் எனக்கும் இது நலமாகத் தோன்றுகிறது” என்று சொல்ல விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என் நினைவுகளையும் தீர்மானங்களையும் நீர் வழிநடத்த வேண்டும்
என்று உம்மை நம்புகிறேன். என் அனுதின வாழ்க்கையில் ஒரு அங்கமாவது உம் விருப்பம் என்று நான் நம்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment