Scripture வேதவசனம்: மாற்கு 12:14 அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும்
உமக்குக் கவையில்லை (அக்கறையில்லை) என்றும் அறிந்திருக்கிறோம், நீர்
முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப்
போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம்
கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.
Observation கவனித்தல்: இயேசுவைப் பற்றி இவ்வளவு உயர்வாகச் சொல்லிய பின்பு, அவர்களால் எப்படி அவருடைய போதனைகளை நிராகரிக்கமுடிந்தது? அவர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளாலேயே தங்களுக்கு தீர்ப்பிட்டுக் கொள்கிறார்கள்.
Application பயன்பாடு: இயேசு உண்மையிலேயே போதகராகவும், சத்தியமுள்ளவராகவும் முகதாட்சணியம் அற்றவராகவும் இருந்து சத்தியத்தின்படி தேவனுடைய வழியை போதிக்கிறவராக இருக்கிறார் எனில், நான் அவர் சொல்வதைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். நான் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இவ்வளவு உயர்வாகச் சொல்லிவிட்டு பின்பு அவருக்குக் கீழ்ப்படியாமல் நடப்பது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மைப் பற்றி சொல்கிறவைகளை உண்மையாகவே நான் விசுவாசிக்கிறேன் என்பதை என் வாழ்க்கையில் காண்பிக்க விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment