Scripture வேதவசனம்:
2கொரிந்தியர் 2:10 எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும்
எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய
சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
11. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
Observation கவனித்தல்: நம்மைப் பிரிக்கும்படி ஒரு பிளவை உண்டாக்குவதே சாத்தானின் நோக்கமாக இருக்கிறது. அவனுடைய திட்டத்தை ஜெயிப்பதற்கான வழி மன்னிப்பதே. மன்னிப்பது என்பது எதுவுமே நடக்கவில்லை என்று சொல்வது அல்ல. மன்னிப்பது என்பது நாம் வேதனை அடையவில்லை என்று சொல்வதல்ல. நடந்தது மோசமானதாகவே இருந்தாலும், பாதிப்படைந்திருந்தாலும் நம் உறவு சீராக இருப்பதே முக்கியமானது என்று சொல்வதே மன்னிப்பு ஆகும். இயேசுவின் உவமையின்படி, நமக்கு தீங்கிழைத்தவர் மன்னிக்கப்படும்படி அதைக் கேட்கக் கூட தேவையில்லை.
Application பயன்பாடு: என் வாழ்வில் வருகிற பாதிப்புகளை நான் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். நான் மன்னிக்கும்போது, சுகமாகுதல் ஆரம்பமாகிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, சாத்தான் என்னை ஜெயிப்பதை நான் விரும்பவில்லை. உம்மைப் போல நான் மன்னிக்கும்படி எனக்குதவும்.
No comments:
Post a Comment