Scripture வேதவசனம்:
2 கொரிந்தியர் 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல்
இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ
மரணத்தை உண்டாக்குகிறது.
Observation கவனித்தல்: நம்மில் அனேகர் துக்கத்தை நன்மையானதாகக் கருதுவதில்லை, மாறாக அது பிரச்சனையினால் வரக்கூடியது என கருதுகிறோம். தேவனுக்கேற்ற துக்கமானது நம் செயல்களுக்காக பொறுப்பேற்றுக் கொண்டு, மன்னிப்பைத் தேடுகிறது. அது நம் தவறல்ல, மற்றவர்கள் நம்மை அவ்வாறு செய்ய வைத்துவிட்டனர். நாம் அதைச் செய்ததினால் அல்ல, நம் வாழ்வில் வரும் பலன்கள் அல்லது நாம் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்ட படியால் துக்கப்படுகிறோம்.
Application பயன்பாடு: தேவன் நம்மை மன்னிக்க விருப்பமுள்ளவராகவும், நம்முடன் உறவை சீர்செய்து கொள்ள விரும்புகிறவராகவும் இருப்பது மிகவும் ஆச்சரியமானது. என்னைப் பொறுத்துவரையில், அவருடைய மன்னிப்பைப் பெறுவதற்கு, நான் செய்தவைகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நான் பாவம் செய்ததை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை எனில், நான் மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதலின் மகிழ்ச்சியை பெற்றனுபவிக்க முடியாது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் ஒருவர் மட்டுமே உண்மையாகவே என்னை மன்னித்து குற்றமனப்பான்மையில் இருந்து என்னை விடுவிக்கமுடியும் என்பதை அறிந்திருக்கிறேன். நான் உடனே மன்னிப்பு கேட்கிறவனாகவும் என் பாவத்தை உடனே ஒப்புக் கொள்கிறவனாகவும் இருக்க விரும்புகிறேன். நான் என் பாவத்தை அறிக்கையிட்டால், என் பாவங்களை மன்னித்து என்னை சுத்திகரிக்க நீர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறீர் என 1யோவான் 1:9கூறுகிறது. ஆமென்.
No comments:
Post a Comment