Scripture வேதவசனம்: மத்தேயு 18: 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
6. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
7. இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

Observation கவனித்தல்: இந்த வசனங்களை இயேசு சொன்னதன் நோக்கம், புதிய விசுவாசிகளை தடுமாறச் செய்து அவர்களை விழப்பண்ணுவதைப் பற்றியதே என்று நான் நம்புகிறேன். ஆயினும், இயேசு ஒரு சிறு குழந்தையை முன்னாக நிறுத்தி, தன் போதனையை ஆரம்பித்தார். ஆகவே நான் ஒவ்வொருமுறை இவ்வசனத்தை நினைக்கும்போது, குழந்தைகளைப் பற்றியும், கருக்கலைப்பு செய்யப்படுபவர்களைப் பற்றியும் நினைக்கிறேன். நாம் குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும்போது, இயேசுவை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால் இயேசுவை புறக்கணிக்கிறோம்.
Application பயன்பாடு: நான் இயேசுவைப் போல இருந்து, குழந்தைகளை வரவேற்க விரும்புகிறேன். நான் அவர்களுடன் இருக்கையில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அவர்கள் அறிய விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, குழந்தைகளுடன் உம் அன்பை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை எனக்குக் காட்டும். ஆமென்.
No comments:
Post a Comment