Tuesday, June 11, 2013

நம்பிக்கை

Scripture வேதவசனம்:  பிலிப்பியர் 1:4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Observation கவனித்தல்:   பிலிப்பியில் உள்ளவர்களுக்காக பவுல் ஜெபித்தபோது, அவர் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணினார். அவர்களுடைய திறமையின் மீது உள்ள நம்பிக்கையில் அல்ல,  தேவன் ஆரம்பித்தவைகளைச் செய்வதற்கு அவருக்கிருக்கும் வல்லமையை நம்பி அவர் ஜெபித்தார்.
 
Application பயன்பாடு:   தேவனின் வல்லமையின் மீதும் அவர் என்னில் துவங்கியதைச் செய்து முடிப்பார் என்ற உறுதியுடனும் நான் ஒவ்வொரு நாளையும் துவங்க வேண்டும். இது என் இரட்சிப்பையும் நான் அவருக்கு செய்யும்படி வைத்திருக்கும் ஊழியத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  நான் எவ்வளவதிகமாக உம்மை என் நினைவுகளில் வைக்கிறேனோ அவ்வளவாக உம் மீது நம்பிக்கை யுடையவனாகவும், நீர் என்னில் துவங்கியதைச் செய்து முடிப்பீர் என்ற உறுதியுடையோனாகவும் இருக்கிறேன். ஆமென்.

No comments:

Post a Comment